வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதீர்கள்;
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்;
ஒரு லட்சியம் - சாதியுங்கள்;
ஒரு சோகம் - தாங்கிக் கொள்ளுங்கள்;
ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள்;
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்.

- டாக்டர் அப்துல் கலாம்


நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை
நீ எண்ணுவது
விண்மீனாக இருந்தாலும்,
உன் உழைப்பால்
நீ எண்ணியது
உன்னை வந்து சேரும்.
நீ நீயாக இரு.

- அப்துல் கலாம்


கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும்,
படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், 
படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தாலும் 
உங்களால் வெற்றியடைய முடியும்.
நீ யாராக இருந்தாலும் உழைப்பால், 
அறிவால் வெற்றியடைவாய்.

-டாக்டர் அப்துல் கலாம்


இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும்
வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்தப்  பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது
உங்கள் கைகளில் தான் உள்ளது.

-டாக்டர் அப்துல் கலாம்



எங்கே இருதயத்தில் அறவொழுக்கம் இருக்கிறதோ 
அங்கே செயல்பாட்டில் அழகு இருக்கும். 
எங்கே செயல்பாட்டில் அழகு இருக்கிறதோ 
அங்கே வீட்டில் ஒத்திசைவு இருக்கும்.
எங்கே வீட்டில் ஒத்திசைவு இருக்கிறதோ 
அங்கே தேசத்தில் ஒழுங்கு இருக்கும். 
எப்போது தேசத்தில் ஒழுங்கு இருக்கிறதோ 
அப்போது உலகில் அமைதி நிலவும்.

-டாக்டர் அப்துல் கலாம்


வெல்வோம், சாதிப்போம், 
வேதனைகளைத் துடைத்தெறிவோம்
எந்தை அருளால் எதுவும் வசமாகும்.

-அப்துல் கலாம்





நம்பிக்கை நிறைந்த ஒருவர் 
யார் முன்னேயும், 
எப்போதும் மண்டியிடுவதில்லை.

-அப்துல் கலாம்




கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே. 
அது உன்னை கொன்று விடும்,
கண்ணை திறந்து பார் 
அதை வென்று விடலாம்.

-அப்துல் கலாம்


நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, 
உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. 

-டாக்டர் அப்துல் கலாம்






நாம் அனைவருக்கும் 
ஒரே மாதிரி திறமை 
இல்லாமல் இருக்கலாம் 
ஆனால் அனைவருக்கும் 
திறமையை வளர்த்துக்கொள்ள 
ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.

-டாக்டர் அப்துல் கலாம்