சந்தோசம் வரும் போது
அதைப்பற்றி சிந்தனை செய்யாதே;
அது போகின்ற போது
அதைப்பற்றிய சிந்தனை செய்.
- அரிஸ்டாடில்
எண்ணத்திற்கேற்ப வசதிகளைப் பெருக்குவதை விட வசதிகளுக்கேற்ப எண்ணங்களை குறைப்பது நலம். - அரிஸ்டாட்டில்
வறுமையே
புரட்சிக்கும் குற்றங்களுக்கும்
தாயகம்.
- அரிஸ்டாட்டில்
ஒரு நகரம்
நல்ல சட்டங்களினால்
ஆளப்படுவதை விட
நல்ல ஒருவரால்
ஆளப்படுவதே மேலானது.
- அரிஸ்டாட்டில்
கோபப்படுவது என்பது யாருக்கும் எளிது. ஆனால் சரியான நபர் மீது சரியான அளவில் சரியான நேரத்தில் சரியான நோக்கத்துடன் கோபப்படுவது எல்லோருக்கும் வராது. - அரிஸ்டாட்டில்
பொருட்களின் புறத் தோற்றத்தை
வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல்
அவற்றின் அகத் தன்மையையும்
புலப்படுத்துவதே கலையின் குறிக்கோள்.
- அரிஸ்டாட்டில்
சந்தோசம் வரும் போது
அதைப் பற்றி சிந்தனை செய்யாதே;
அது போகின்ற போது
அதைப் பற்றிய சிந்தனை செய்.
- அரிஸ்டாட்டில்
இரண்டாம் தரமான
மனிதர்களைக் கொண்டு
முதல் தரமான அரசாங்கத்தை
உருவாக்க முடியாது.
-அரிஸ்டாட்டில்
அவனவனுக்கு உரித்தானதை
அவனவனுக்கு வழங்குவது தான்
நீதி.
-அரிஸ்டாட்டில்
முனிவரின் மூளையில் கூட
முட்டாள்தனம் ஒரு மூலையில் இருக்கும்.
-அரிஸ்டாட்டில்
கட்டளையிட விரும்புபவன்
முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.
-அரிஸ்டாட்டில்
ஒருவனுடைய மனம்
தூய்மையாக இல்லாவிட்டால்
பணமோ, வலிமையோ, அழகோ
அவனுக்குப் பயன்படாது.
-அரிஸ்டாட்டில்
ஒரு
குடிமகன் ஆள்பதற்கு மட்டுமல்ல, ஆளப்படுவதற்கும் தக்கவனாய் இருத்தல் வேண்டும்.
-அரிஸ்டாட்டில்
கல்வியும் நன்னடத்தையுமே
ஒரு மனிதனை நல்லவனாக்குகின்றன.
-அரிஸ்டாட்டில்
கல்வியின் வேர்களோ கசப்பானவை, ஆனால் கனியோ இனிப்பானது. -அரிஸ்டாட்டில்
அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம்