நான் சில காரியங்களை
செய்யாமல் விடுவேனே தவிர
செய்கிற பல காரியங்களை
நிறைவாக செய்வேன்.

- அறிஞர் அண்ணா


அடிமைத்தனம் ஒரு
கூட்டுச் சரக்கு.

- அறிஞர் அண்ணா



நெருப்பு வேண்டுமா வேண்டாமா
என்று கேட்டால் என்ன சொல்வது?
நிச்சயமாக வேண்டும் அடுப்புக்கு.
அடுப்புக்கு பயன்பட வேண்டிய நெருப்பு
வீட்டுக் கூரையை பிடித்துக் கொண்டால்
என்ன செய்வோம் ?
அக்னி தேவன் திருவிளையாடல்
என்றா சொல்வோம்.

- அறிஞர் அண்ணா


அக்கிரமம் தென்படும்போது மிகப் பலருக்கு
அது தன்னை தாக்காதபடி
தடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும்
ஒதுங்கிக்கொள்வோம் என்ற
பாதுகாப்பு உணர்ச்சியும் தான் தோன்றும்.
எதிர்த்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் எழுவதில்லை.

- அறிஞர் அண்ணா


திட்டங்களை வகுப்பவர்கள் மேதைகள்.
ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால்
மக்களின் சுக துக்கங்களை
அறிந்துகொள்ள முடியாத தொலைவிலும்
மக்களது உண்மை நிலையை
அறிந்து கொள்ள விரும்பாத நிலையிலும்
அவர்கள் இருக்கிறார்கள்
என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

- அறிஞர் அண்ணா


நெஞ்சிலே வலுவிருப்பின்
வெற்றி தஞ்சமென்று உரைத்து வந்து
நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி.

- அறிஞர் அண்ணா


மக்களிடையே
மதிப்பை இழந்து,
மாண்பை இழந்து
கருணையை இழந்து இருக்கும்
சோற்றுத் துருத்திகளால்
நாட்டுக்கு ஏதாகிலும் பயன் உண்டா?

-அறிஞர் அண்ணா


விஜயபுரியை அடைய
வேதனைபுரத்தை கடந்து தான்
செல்ல வேண்டும்.

-அறிஞர் அண்ணா




குறளைக்  கற்றுக்கொள்வதால் நீங்கள் செம்மைப்பட்டு,
நீங்கள் செம்மைப்படுவதால் நாடு செம்மைப்பட்டு,
நாடு செம்மைப்படுவதால்  உலகு செம்மைப்படச் செய்யவேண்டும்.

-அறிஞர் அண்ணா



கலை என்பது
நெறி, முறை, வீரம், ஒழுக்கம், கற்பு, காதல்
என்னும் பண்புகளைத்  தரக்கூடியதாக
இருத்தல் வேண்டும்.

-அறிஞர் அண்ணா 


நல்ல எண்ணங்களைத் தூவினால்தான்
அவை நல்ல பலனைத் தரும்.
பகுத்தறிவால் பண்படாத எந்த உள்ளத்தில்
நல்லெண்ணத்தை விதைத்தாலும் 
அது நல்ல விளைவைத் தராது.

- அறிஞர் அண்ணா 



போற்ற வேண்டியவை உண்மை, உழைப்பு, உயர்வு;
பின்பற்ற வேண்டியவை கனிவு, பணிவு, துணிவு;
பேணப்பட வேண்டியவை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.

-அறிஞர் அண்ணா 


மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பது போல
அறிவை வளர்த்துக்கொண்டு பயன் பெறவேண்டும்.

- அறிஞர் அண்ணா 



பணத்துக்கு இருக்கும் காந்த சக்தி விசித்திரமானது.
அந்த சக்தியால் இழுக்கப்படாத பொருளே இல்லை.
அரசு, புகழ் எதுவும் அந்த காந்த சக்திக்குக் கட்டுப்பட்டுவிடுகிறது.
அது மட்டுமா? பணத்தை பணம் இழுக்கிறது.

-அறிஞர் அண்ணா




நமக்கு இன்னலும் இடையூறும் இருக்கத்தான் செய்யும்;
ஆனால் நமது உழைப்பு ஒரு நாளும் வீண்போகாது.

-அறிஞர் அண்ணா





பணம் வாழ்க்கைக்கொரு கருவியே ஒழிய 
அதனை பிரேமைக்குரிய பொருளாகக் கொள்ளுதல் கூடாது. 
பணப்பித்தம் கூடாது. 
வெறும் அலங்காரங்களுக்கும் ஆடம்பரத்துக்கும் 
பணம் தேடிக்கொண்டிருப்பவனின் வாழ்வு பாழ்படும். 
அலைந்து திரிவானே ஒழிய 
வாழ்க்கையில் இன்பம் காணமாட்டான்.

- அறிஞர் அண்ணா 



நம்பிக்கை என்பது சிறு புயல் காற்றில் 
துவளும் மென்மலரல்ல.
அடிபெயரா இமயம் போன்றது.

-அறிஞர் அண்ணா



பொன்னும் பொருளும் நமக்கு மட்டும் 
கிடைத்தால் போதும் என்று எண்ணும் 
தன்னலம் சுட்டெரிக்கப்படவேண்டும்.

-அறிஞர் அண்ணா 



அதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது.
அதிகாரத்தைக் கையாண்டு ஒரு முறை அனுபவப்பட்டுவிட்டவர்கள், வெகு சுலபத்தில் அதனைக் கைவிடத்துணியார்.
என்றும் தன்னிடத்திலேயே அதிகாரம் சிரஞ்சீவியாக நிலைத்திருக்கப் பார்த்துக்கொள்வதில் மிக்க கவலை எடுத்துக்கொள்வர்.

-அறிஞர் அண்ணா 



சிலர் பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள்;
சிலர் பிரச்சினைகளால் உருவாகிறார்கள்;
சிலர் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறார்கள்;
சிலர் பிரச்சினைகளால் தீர்ந்து போகிறார்கள்.

-அறிஞர் அண்ணா