நாம் உண்ண  நாழி அரிசி,
உடுக்க நான்கு முழம்;
ஆனால் நாம் ஆசைப்படுவது 
என்பது கோடி விஷயங்கள்.

கிடைப்பதை வைத்து 
போதும் என்ற மனநிலையில் வாழாமல் 
வாழும் மனிதரின் வாழ்க்கை 
மண் கலம் போல் எப்போதும் 
துன்பமே நிலைக்கும்.

- அவ்வையார் 


நாம் செய்த புண்ணியத்தின் பலனாக
ஒரு காரியம் கைகூடும் வேலை வரும் வரை
நாம் செய்யும் எந்த முயற்சியும் பலன் தராது.

- ஔவையார்


ஒன்றுக்கொன்று முரணான நூல்கள்
பலவற்றையும் கூடப் படித்து
நல்லவை கெட்டவைகளை
நீயே தேர்ந்தேடுக்கும்படியான அறிவை வளர்த்துக்கொள்.

- ஔவையார்


படிப்பில் வரும் வித்தைகளை விரும்பு.
உலகம் விந்தையென வியக்குமாறு
புதுமையான காரியங்களை செய்யவே 
ஆசைப்படு.

- ஔவையார்


அனைத்து சமயமும் கூறுவது 
தீமையை செய்யாதே 
உன்னால் முடிந்த நன்மையை செய் 
என்பது தான்.

- ஔவையார் 

( எச்சமயத்தோர் சொல்லும் தீதொழிய நன்மை செயல் -  நல்வழி )





நாம் மனம் வருந்தி அழைத்தாலும், 
நமக்கு என்று இல்லாத பொருள் 
நமக்குக் கிடைக்காது;

அது போல் 
ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும் 
அது நம்மை விட்டுப் போகாது.

- ஔவையார்