பெரும்பாலான மனிதர்கள்
தாங்கள் எந்த அளவுக்கு
இன்பமாய் இருக்க உள்ளத்தில்
உறுதி கொள்கின்றனரோ
அந்த அளவுக்கு இன்பமாய்
இருப்பார்கள்.

- ஆப்ரஹாம் லிங்கன்


பலம் பொருந்தியவனின்
பலத்தைக் குறைப்பதால்
பலவீனனை பயில்வானாக்க முடியாது.

- ஆபிரகாம் லிங்கன்


சாதாரணத் தோற்றமுடைய மக்களையே
இறைவன் அதிகம் விரும்புகிறார் போலும்.
ஆகவே தான் அவர்களை
ஏராளமாக படைத்திருக்கின்றார்.

- ஆபிரகாம் லிங்கன் 




உலக வரலாற்றிலே
வலிமையே நியாயத்தை உருவாக்குகிறது
என்று சொல்லப்படுகிறது

நம்முடைய காலத்திலே
நியாயமே வலிமையை உருவாக்குகிறது
என்று மாற்றிக் காட்ட வேண்டும்.

- ஆபிரகாம் லிங்கன்


பெரும்பாலான மனிதர்கள்
தாங்கள் எந்த அளவுக்கு இன்பமாய் இருக்க
உள்ளத்தில் உறுதி கொள்கின்றனரோ
அந்த அளவுக்கு இன்பமாய் இருப்பார்கள்.

-ஆப்ரஹாம் லிங்கன் 




மனித சுதந்திரத்தைப் பறித்து
தன்னடக்கத்தையும் ஊக்கத்தையும்
உண்டாக்க முடியாது.

- ஆபிரகாம் லிங்கன்


நாளைய தினம் 
இந்த வேலையை செய்யப்போகிறேன் 
என்று நினைத்து
இன்று செய்ய முடிந்தவைகளை 
நாளைக்கு ஒத்திப் போடாதீர்கள்.

- ஆபிரகாம் லிங்கன் 




உதவும் மனப்பான்மை உள்ளவனுக்கே
குறை கூறும் உரிமை உண்டு.

- ஆபிரகாம் லிங்கன் 



கெட்ட சட்டம் 
ரத்தாகும்படி செய்வதற்கு சிறந்த வழி
அதைக் கண்டிப்பாகச் செயல்படுத்துவது.

-ஆபிரகாம் லிங்கன்




நான் மெதுவாக நடப்பவன்தான், 
ஆனால் ஒருபோதும் பின்வாங்குவதில்லை.

-ஆபிரகாம் லிங்கன் 





தனக்குக் கிடைக்கும் 
ஊதியத்தின் மதிப்பை விட
தன் உழைப்பின் மதிப்பை 
உயர்த்திக் காட்டும் மனிதன் தான்
சமூகத்தில் உயர முடியும்.

-ஆபிரகாம் லிங்கன்