தயங்குபவனுக்கு
அதிகாரம், செல்வம், வெற்றி
போன்றவைகள் கிட்டாது.
- எமேர்சன்
பிறர் மீது
கிண்டலையும் கேலியையும்
வீசிக் கொண்டிருப்பதற்கு ஏது நேரம் வாழ்க்கையில்?
வாழ்க்கையே மிக சிறியது.
அதையுமா வீணாக்குவது?
நம் பணியை நாம் ஆற்றுவோம்.
அதற்கே நேரம் போதாது.
- எமேர்சன்
உலக சரித்திரத்தில்
காணப்பெறும் காரியங்களெல்லாம்
உற்சாகத்தின் வெற்றிச் சின்னங்களே
- எமெர்சன்
உழைப்புக்கு
ஒரு நாள் போதும்;
உல்லாசத்துக்கு
ஒரு மணி நேரம் போதும்;
ஆனால் நட்புக்கோ
ஒரு ஆயுள் போதாது.
- ரால்ப் வால்டோ எமெர்சண்
சின்னஞ்சிறிய தியாகங்கள் தான்
நல்ல நாகரிகத்தை
உண்டு பண்ணுகின்றன.
- எமெர்சன்
ஆயிரம் காடுகளை உண்டாக்கும் ஆற்றல்
ஒரு விதையில் அடங்கியிருக்கிறது.
- எமர்சன்
சாமான்ய மனிதனை விட
மாவீரன் அதிக வீரம் காட்டுவதில்லை;
சாதாரண மனிதன் காட்டும் வீரத்தை
மாவீரன் ஐந்து நிமிடங்கள்
அதிகம் காட்டுகிறான் அவ்வளவுதான்.
-எமெர்சன்
மற்றவர்களிடம்
எதைக் குற்றம் என்று பார்க்கிறோமோ
அதுவே நமக்கு ஏற்பட்டால்
சோதனை என்று அழைக்கிறோம்.
- எமர்சன்
பழக்கத்துக்கு அடிமை ஆவது
கண்ணைக் கட்டிக்கொண்டு
விளையாடுவது போன்றது.
-எமெர்சன்
வாழ்க்கை என்பது சந்திரன் மாதிரி.
சில சமயம் இருட்டு.
சில சமயம் முழு நிலவு.
- எமெர்சன்
பார்க்க கண்களை கொடுத்த ஆண்டவன் பாராதிருக்க இமைகளையும் கொடுத்திருக்கிறான். இரண்டையும் சரியான சமயத்தில் பயன்படுத்துபவன் புத்திசாலி. -எமெர்சன்
நாம் விருந்துக்குப் போகும் போது
உடுத்த வேண்டிய மிகச் சிறந்த
உடைகளில் ஒன்று நகைச்சுவை.
- எமெர்சன்
நீ உலகம் விரும்பக் கூடிய ஒன்றை வைத்துக் கொண்டு
காட்டின் நடுவே உட்கார்ந்திருந்தாலும்
மக்கள் உன்னைத் தேடி
ஒற்றையடிப் பாதை போட்டுக் கொண்டு
உன்னிடம் வந்து சேர்ந்து விடுவார்கள்.
- எமெர்சன்
நல்லுணர்வு என்பது
பகல் பொழுதைப் போன்றது.
அது தான் ஒளியை
எல்லாவற்றின் மீதும் பரப்புகிறது.
- எமெர்சன்
உயர்ந்த விஷயங்களை
எளிய முறையில் கூறுவதே
அறிவின் லட்சணம்.
- எமெர்சன்
நீ உனக்குள்ளேயே உற்றுப்பார்
பீரிட்டுக் கொண்டிருக்கும் ஆற்றலின்
ஊற்றுக்கண் தெரியும்.
-எமெர்சன்
எதிராளியின் தோல்வியைக் கண்டு
அதை வெற்றிகரமாகக் கொண்டாடாமல்
பொறுமையாக இருக்க முடியுமானால்
அதுவே இதயத்துக்கு மகத்தான சோதனை.
- எமெர்சன்
தயங்குபவனுக்கு
அதிகாரம், செல்வம், புகழ், வெற்றி
போன்றவைகள் கிட்டாது.