துணிவு!
இதில்தான் உங்களின்
மேதைத்தனம், ஆற்றல், அற்புதம் என
அனைத்தும் புதைந்து கிடக்கின்றன.
- கதே
தன்னைத்தானே அறிவதற்குச் சிறந்த வழி
தியானம் செய்வது அல்ல;
செயல்தான்.
உங்கள் கடமையை முழு ஈடுபாட்டுடன் முடியுங்கள்;
உங்களின் தகுதியும் தரமும் என்ன என்பதை
நீங்களே கண்டுபிடித்து விடுவீர்கள்.
- கதே
ஒவ்வொரு காலையும்
உங்கள் குறிக்கோளை
பலப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு மாலையும்
ஓரளவு வேலை முடிந்திருப்பதைக்
காணலாம்.
- கதே
நமக்கு கற்றுக் கொடுப்பவரெல்லாம்
ஆசிரியர் அல்ல;
யாரிடம் நாம் கற்றுக்கொள்கிறோமோ
அவரே நமக்கு ஆசிரியர்.
- கதே
உன் கடமையை
செய்ய முயல்க;
அப்போது உன் தகுதியை
உடனே அறிந்து கொள்ளலாம்.
- கதே
நேற்று செய்த தவறை ஒப்புக்கொண்டால்
இன்று நீ அறிவாளி ஆவாய்.
- கதே
முயற்சி என்பது
கானல் நீர் அன்று;
அது நிச்சயம்
ஆற்றங்கரைக்கு அழைத்தே செல்லும்.
- கதே
அற்பமாய் எதிர்பார்க்கவும்
அதிகமாய் அனுபவிக்கவும்
கற்றுக் கொள்வதே
வெற்றியின் ரகசியம்.
- ராபர்ட் கதே
எதற்காகவும் வருத்தப்படாதே.
வருத்தம் கோபத்தை உண்டாக்குகிறது;
கோபம் வெறுப்பை கிளருகிறது;
வெறுப்பு விரோதமாக மாறுகிறது;
விரோதம் பகையாகிவிடுகிறது;
வருத்தம் தோன்றும் போதே
அதை அலட்சியப் படுத்திவிடுங்கள்.
- கதே
ஒரு நொடி காலம் தான் என்றாலும்
அதை தனக்குத் தகுந்தவாறு
சாதகமாக்கிக் கொள்பவனே புத்திசாலி.
-கதே
தவறான பாதையில்
எவ்வளவு தூரம் சென்று இருந்தாலும் சரி
பரவாயில்லை
உடனே திரும்பி வாருங்கள்.
-கதே
பறவைக்கு பயந்து
விதைக்காமல் இருக்காதே.
-கதே
மகிழ்ச்சியுடன் வாழ
முயற்சி செய்ய வேண்டும்.
மனிதன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து
வெற்றி பெறவே பிறந்தவன்.
மகிழ்ச்சியுடன் வாழும் மனிதன் தான்
உலகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும்
சக்தியையும் பெறுகிறான்.
- கதே
ஒன்றை மட்டும் நன்கு தெரிந்து வைத்துகொள்ளுங்கள். உலகின் பிரச்னையைத் தீர்க்க பிறந்தவனல்ல மனிதன். தான் செய்ய வேண்டியதை நன்றாகத் தெரிந்து கொண்டு அதைக் கருணையின் எல்லைக்கு உட்பட்டு செய்து முடிக்கப் பிறந்தவன் தான் மனிதன். - கதே
வில்லாய் வளை;
அதே சமயம்
வளைந்த போதெல்லாம்
அம்பாய் பாயாதே.
- கதே
உங்களால் எது முடியுமோ அல்லது முடியும் என்று
எதைக் கனவு காண்கிறீர்களோ
அதை உடனே செய்யத் துவங்குக.
துணிச்சலில் மேதைமை இருக்கிறது.
பலம் இருக்கிறது.
மந்திர சக்தி இருக்கிறது.
இப்போதே தொடங்குக.
- கதே
தனக்கு எது திருப்தியானதோ அதை செய்யாமல்
மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்பதற்காக
புகழும் பொருளும் தேட சிரமம் எடுத்துக் கொள்பவன்
என்னைப் பொறுத்தவரை முழு மூடன்.
- கதே
கறையில்லா இதயம் தான்
கலக்கமில்லா அமைதியை
அறிய வல்லது.
- கதே
தன்னைத் தானே அறிவதற்குச் சிறந்த வழி
தியானம் செய்வது அல்ல;
செயல்தான்.
உங்கள் கடமையை முழு ஈடுபாட்டுடன் முடியுங்கள்;
உங்களின் தகுதியும் தரமும் என்ன என்பதை
நீங்களே கண்டுபிடித்து விடுவீர்கள்.
- கதே
துணிவு!
இதில்தான் உங்களின் மேதைத்தனம், ஆற்றல், அற்புதம்
என அனைத்தும் புதைந்து கிடக்கின்றன.