எதிரிகளைத் தாக்க
கட்டப்படும் கோட்டைகளே
கல்வி சாலைகள்.

- கன்பூசியஸ்


மனிதரின் இயல்புகள் ஒரே தன்மையன.
அவர்களின் பழக்க வழக்கங்கள் தான் அவர்களைப் பிரித்து
பெரிதும் வேறுபடுத்துகின்றன.

- கன்பூசியஸ்


தொலைவில் தெரிவதைப் பற்றி சிந்திக்காதவனுக்கு
துன்பம் அருகில் காத்திருக்கிறது என்பது
தெரியாமலே போகிறது.

- கன்பூசியஸ்



வெற்றி அடைகிற வழி எனக்குத் தெரியாது.
ஆனால் 
எல்லோரையும் ஒப்புக்கொள்ள வைப்பதுதான் 
தோல்விக்கான அஸ்திவாரம்.

- கன்புசியஸ்




உயர்ந்த மனிதர்
சொற்களில் பலவீனமாக இருந்தாலும்
நடத்தையில் மிக உறுதியாக இருப்பர்.

- கன்பூசியஸ் 




நீ யாருக்கும் பக்கத்திலிருக்காதே;
தூரத்திலேயே இரு.
பக்கத்தில் இருக்கும் இமையைப்
பார்க்க முடியாத கண்கள்,
தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்தைப்
பார்த்து விடுகின்றன.

-கன்பூசியஸ்


பிறர் எனக்கு எதை செய்யக்கூடாது
என்று விரும்புகிறேனோ
அதை அவர்களுக்கு நானும் செய்யக்கூடாது
என்று விரும்புவேன்.

-கன்பூஷியஸ்



சிந்திக்காமல் படிப்பது வீண்;
படிக்காமல் சிந்திப்பது ஆபத்து.

-கன்பூசியஸ் 


மனிதாபிமானம் என்ற நீரூற்று
கயவர்களின் நெஞ்சமான 
பாலைவனங்களிலும் தோன்றலாம்.

-கன்பூசியஸ் 




மனத்தைக் கடமையில் செலுத்துங்கள்;
ஒழுக்கத்தைக் கடைபிடியுங்கள்;
அன்புக்குக் கட்டுப்படுங்கள்;
மேலான கலைகளில் மனதைச் செலுத்தி 
அமைதி பெறுங்கள்.

-கன்பூசியஸ் 



எதிர்காலத்தை 
அறிந்து கொள்ள வேண்டுமானால்
பழைமையை ஆராய்ந்து
பாருங்கள்.

-கன்பூசியஸ் 



நல்ல கல்வியும் நல்ல அறிவுமே
உலகில் சிறந்த நன்மையைச் செய்ய வல்லன.

- கன்பூசியஸ்


புகழைப் பொருட்படுத்தாதீர்கள் ஆனால் புகழ் பெறுவதற்குத் தகுதி உடையவராக உங்களை உருவாக்கிகொள்ளுங்கள்.

-கன்பூசியஸ் 

சிறிய விஷயங்களில் 
பொறுமை காட்டா விட்டால்
பெரிய காரியங்கள் 
கெட்டுப் போகின்றன.

-கன்பூசியஸ் 


ஓர் ஏழையின் செல்வம் அவனது திறமைதான்.

-கன்பூசியஸ் 

உங்களுக்கு 
சரியான ஆலோசனை வழங்கக் கூடிய 
பெரிய மனிதர்
உங்களைத் தவிர 
வேறு யாராகவும் இருக்க முடியாது.

-கன்பூசியஸ்


கெட்ட மனிதர்களைப்  பார்க்கும்போது
உங்கள் இதயத்தை பரிசோதித்துக் கொள்ளுங்கள்;
நல்ல மனிதர்களைப் பார்க்கும்போது
அவர்களைப் பற்றி சிந்தியுங்கள்.
அதன் மூலம் உயர்வடையுங்கள் .

-கன்பூசியஸ் 


தனக்குத் தெரிந்ததை தெரியுமென்றும், தெரியாததைத் தெரியாதென்றும் கூறுவது எதுவோ அதுதான் அறிவாகும்.

-கன்பூசியஸ்

இருள் இருள் என்று சொல்லிக் கொண்டு  
சும்மா  இருப்பதைவிட
ஒரு சிறிய மெழுகுவர்த்தியைத் 
தேட முயற்சி செய்.

-கன்பூசியஸ் 




ஒருவனிடம் இருக்கும் 
உயர்ந்த சக்தியை கண்டுபிடித்து வளர்ப்பது 
நாம் கற்கும் கல்வியே  ஆகும்.

- கன்பூசியஸ்