மௌனம் ஒரு தேசிய மொழி அதை காதலர்கள் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
- கண்ணதாசன்
பரம எதிரியாக இருந்தாலும்
நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது
பார்க்கத் தவறாதே.
- கண்ணதாசன்
தேன் குடத்தில் விழுந்தால்
தேனிக்கு கூட அது சமாதி தான்;
அதுபோலத் தான்
மனிதனுக்கு செல்வமும்.
- கண்ணதாசன்
மலரைப் பார்; கொடியைப் பார்;
வேர் எப்படி இருக்குமென்று முயற்சிக்காதே.
அதை பார்க்க முயன்றால்
மலரையும் கொடியையும் பார்க்க முடியாது.
- கண்ணதாசன்
எப்படியாவது சம்பாதிக்கவேண்டும்
என்று நினைப்பவர்கள்
சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமலேயே
மாண்டு போகிறார்கள்.
- கண்ணதாசன்
சம்பாதிக்க ஒரு புத்தி வேண்டும்;
சம்பாதித்ததை சேமிக்க ஓர் புத்தி வேண்டும்;
சேமித்ததை செலவழிக்க ஒரு புத்தி வேண்டும்.
- கண்ணதாசன்
சகோதரர்களாக இருங்கள்
ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
- கண்ணதாசன்
கண்ணில் காணும் உலகத்தை விட
கற்பனை உலகம் சுவையானது
தங்கு தடை இல்லாமல் எங்கும் போக முடிகிறது;
ஆனால் உள்ளம் காட்டுகிற இடமெல்லாம்
கைக்கு கிடைத்து விடுவதில்லை.
- கண்ணதாசன்
உன்னுடைய நெஞ்சில் வஞ்சகம் இல்லாதவரை
உன்னை யார் வஞ்சித்தாலும்
திருப்பியடிக்கும் காற்று
உனக்குச் சாதகமாகவே அடிக்கும்.
- கண்ணதாசன்
காரியத்தில் முக்கியத்துவத்தை விட
காரியம் செய்யும் காலத்தின் முக்கியத்துவமே
பிரதானம்.
- கண்ணதாசன்
வீடே இல்லையென்றால் விசனம் வருவதில்லை;
ஒரு வீடு கிடைத்து விட்டால் மறு வீடு கேட்கிறது.
- கண்ணதாசன்
தேவைக்கு மேலே பொருளும்
திறமைக்கு மேலே புகழும்
கிடைத்துவிட்டால்
பார்வையில் படுவதெல்லாம்
சாதாரணமாகத்தான் தோன்றும்.
- கண்ணதாசன்
ஒரே மாதிரி துயரம் வந்தபோது
அவர்கள் நண்பர் ஆனார்கள்;
ஒரே மாதிரியான ஆசை வந்து விட்டதல்லவா
அவர்கள் பகைவர் ஆனார்கள்.
- கண்ணதாசன்
அது வேண்டும் இது வேண்டும்
என்கிற ஆசை முடிந்து விட்டால்
வாழ்க்கை சுவை நிரம்பியதாக
ஆகிவிடுகிறது.
- கண்ணதாசன்
ஒவ்வொரு மனிதனும்
தான் புறப்பட்ட இடத்திற்கு
ஒருமுறை திரும்பி வருகிறான்.
- கண்ணதாசன்
நீ
இறைச்சி சாப்பிடாவிட்டால் என்ன?
உன் இறைச்சியை
பூமி தான் சாப்பிடப்போகிறதே .
- கண்ணதாசன்
அனுபவம் என்பது
ஒரு புது மாதிரியான உபாத்தியார்.
அது பாடங்களை கற்றுத் தந்த பின்
பரீட்சை வைப்பதில்லை;
பரீட்சைகளின் மூலமே தான்
பாடங்களை கற்றுத் தருகிறது.
- கண்ணதாசன்
கங்கையின் தண்ணீருக்கு
பெரும் சக்தி இருக்குமானால்
காசியில் ஏன்
பாவிகள் இருக்கின்றனர்.
- கண்ணதாசன்
கருணையை இழந்துவிட்ட மனம்
பாறையில் செதுக்கப்பட்ட பூவைப் போன்றது.