எவனொருவன் தனக்குத் தானே கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு அவற்றை கடைப்பிடித்து வாழ்கிறானோ
அவனே சுதந்திரமானவன்.
- மகாத்மா காந்தி
தாய் மொழிகளுக்கு
உரிய உன்னத ஸ்தானத்தை
கொடுக்காத எந்தக் கல்வித் திட்டமும்
கல்விப் பிரச்சினையின் விளிம்பைக் கூடத்
தொடத் தகுதியற்றதாகும்.
- மகாத்மா காந்தி
நீங்கள் நாட்டுக்கு போதிக்க வேண்டிய
நெறியின் தலையாய அம்சம்
வாளை எப்படிப் பயன்படுத்துவது என்பதல்ல.
வாளைக் கண்டு இனியும்
பயப்படாமல் இருப்பதே மேல்.
- காந்தி
மற்றவர்களை கெட்டவர்கள் என்று
சொல்வதன் மூலம் நாம்
நல்லவர்களாகிவிட மாட்டோம்
- மகாத்மா காந்தி
நட்பு என்பது உடன்படிக்கையன்று;
கைம்மாறு வேண்டாத ஒரு உறவேயாகும்.
- மகாத்மா காந்தி
பிறரை தாழ்த்துபவன்
தானும் தாழ்ந்து போவான்
என்பது இயற்கை தர்மமாகும்.
- மகாத்மா காந்தி
கடவுள் மாறாதவர்.
அவரைப்பற்றி
மக்கள் தெரிந்து கொண்டிருக்கும்
எண்ணங்களே
மாறிக் கொண்டிருக்கின்றன.
- காந்தி
மென்மைத் தன்மை, சுய தியாகம்,
பரோபகாரம் போன்றவை
எந்த ஒரு தனிப்பட்ட மதம்
அல்லது இனத்திற்கு மட்டும்
சொந்தமானதல்ல.
- மகாத்மா காந்தி
உண்மையை கூறும்போது
அது யாரை தாக்குகிறதென்று
பார்க்காதே.
- மகாத்மா காந்தி
அறிவைக் கொண்டு
ஆண்டவனை அறியலாம்
என்பது முடியாத செயல்;
அறிவை விட நம்பிக்கை மேலானது.
நம்பிக்கை உடையவன்
எளிதாக முடிக்க வல்லவன்,
இறைவனையும் அவன் அறிவான்.
- மகாத்மா காந்தி
நாம் திருந்தும்போது
அரசும் திருந்தியே தீரும்.
-மகாத்மா காந்தி
சூதாட்டத்திற்காகவும் குடிக்கவும்
உங்களால் செலவிடப்படும் பணம்
உங்களுக்கு இரட்டை நஷ்டங்களைக் கொண்டு வரும்.
முதலாவதாக பணத்தை இழக்கிறீர்கள்.
இரண்டாவதாக உங்கள் கௌரவத்தையும்
ஆரோக்கியத்தையும் இழந்துவிடுகிறீர்கள்.
- காந்தி
நீங்கள் எதை செய்தாலும்
உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும்
உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.
- மகாத்மா காந்தி
ஹிம்சையை அஹிம்சையால் வெல்லமுடியாமல் போகுமாயின்
அதற்குக் காரணம் உபயோகிப்பவரின் மனதின் பலவீனமே.
- காந்தியடிகள்
மற்றவர்களை கெட்டவர்கள் என்று
சொல்வதன் மூலம்
நாம் நல்லவர்களாகி விட மாட்டோம்.
- மகாத்மா காந்தி
அஹிம்சையிலும் சத்தியத்திலும்
தோல்வி என்பதே கிடையாது.
- மகாத்மா காந்தி
சிரமமின்றி இலாவகமாகச்
செய்து முடிக்க வேண்டுமென்று
எதிர்பார்ப்பதை விட,
விடா முயற்சியுடன் உழைத்து
செய்து முடிக்க
நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.
-காந்தி
எறும்புக்குத் தேவைப்படுவதைவிட
ஆயிரம் மடங்கு உணவு
யானைக்குத் தேவைப்படுகிறது.
ஆனால் இது ஏற்றத்தாழ்வின் அறிகுறி அல்ல.
-காந்தி
நண்பர்களைப் பற்றி பெருமையாக நிறையப் பேசுங்கள்;
பிடிக்காதவர்களைப் பற்றி எந்த இடத்திலும் எதுவும் பேசாதீர்கள்.
-காந்தி
வாடிக்கையாளர் என்பவர்
நம் கடைக்கு வரும் மிக முக்கியமான நபர்.
அவர் நம்மை நம்பி அல்ல,
அவரை நம்பித்தான் நாம் இருக்கிறோம்.