நீங்கள் உங்களை நம்ப வேண்டும்.
அதுதான் வாழ்வின் ரகசியம்.
நான் அநாதை விடுதியில் இருந்த போதும்
உணவுக்காக தெருக்களில் சுற்றித் திரிந்த போதும்
என்னை நான் உலகின் மிகச் சிறந்த நடிகனாகவே எண்ணிக்கொள்வேன்.

- சாப்ளின்


பணம் நமக்கு
எல்லாவற்றையும் கொடுக்கலாம்;
ஆனால்
வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை
பணத்தால் திருப்பி தர முடியாது.

- சார்லி சாப்ளின்

வாழ்க்கை அற்புதமானதாக
இருக்க முடியும்;
நீங்கள் அதைப்பற்றி
பயப்படவில்லை என்றால்.

- சார்லி சாப்ளின்


இந்த பொல்லாத உலகில்
எதுவும் நிரந்தரம் இல்லை;
நமது துன்பங்களும்தான்.

- சார்லி சாப்ளின்


நீங்கள் கீழ்நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தால்
உங்களால் ஒருபோதும் வானவில்லை காணமுடியாது.

- சார்லி சாப்ளின்


கண்ணாடிதான் எனது சிறந்த நண்பன்
ஏனெனில் நான் அழும்போது 
அது ஒருபோதும் சிரித்ததில்லை.

-சார்லி சாப்ளின்