மனிதனுக்கு மனிதன்
சரியான உறவுகள் கொள்வதைத்
தடுக்கின்ற எந்த ஒரு மதமும்
மதமே அல்ல.
அது அடக்குமுறையின் அடையாளமே.

- டாக்டர் அம்பேத்கார்


ஆடுகளை தான்
கோவில்கள் முன்பாக
வெட்டுகிறார்களே ஒழிய
சிங்கங்களை அல்ல;
ஆடுகளாக இருக்க வேண்டாம்
சிங்கங்களைப் போன்று
வீறுகொண்டெழுமின்.

- டாக்டர் அம்பேத்கார்


உலகில் யாரும்
தெய்வீக குணங்களுடன் பிறப்பதில்லை
ஒவ்வொருவரும்
அவர்கள் மேற்கொள்ளும்
முயற்சிகளை பொறுத்து தான்
முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது.

- டாக்டர் அம்பேத்கார்


ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள்,
அதை அடைவதற்காக விடா முயற்சியுடன்
உழைத்து முன்னேறுங்கள்.

- டாக்டர் அம்பேத்கர்


உங்களின் வறுமை உடன் பிறந்தது,
தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது
என்றெண்ணுவது மடமை ஆகும்.

- டாக்டர் அம்பேத்கர்


நம்முடைய கனவுகளை லட்சியங்களை அடைய
இடையிலுள்ள தடை கற்களை உடைக்க வேண்டும்.

-  அம்பேத்கார்