உங்கள் அன்பை
இரகசியமாக
வைத்திருக்காதீர்கள்.

 - தாகூர்


ஒரு மலரையோ
ஒரு பூச்சியையோ
அதன் தோற்றத்தைக் கண்டு
மதிப்பிட்டு விடலாம்.
ஆனால், மனிதப் பிறவியை
அவ்வாறு மதிப்பிட இயலாது.

- தாகூர்


துன்பங்கள்
நமக்கு வழங்கப்பட்ட சிறந்த ஆசிரியர்கள்;
நாம் ஆராய்ந்து பெரும் அறிவைவிட
அதிகமான அறிவை
ஒரு கண்ணீர்த்துளி நமக்கு அளிக்கிறது.

-தாகூர்


கூட்டம் கூடுவது எளிதான காரியம்;
ஆனால் ஒன்று படுவதுதான் கடினம்;
உழைப்பும் தியாகமும் சேர்ந்தால் தான்
இந்த ஒற்றுமை உணர்ச்சி பிறக்கும்.

-தாகூர்


இறைவன் மனிதனிடம் இன்னமும்
நம்பிக்கை இழந்துவிடவில்லை
என்ற இனிய செய்தியுடன்தான்
ஒவ்வொரு குழந்தையும் வருகிறது..

- தாகூர்

மதங்களின் பெயரால் சண்டையிட்டுக் கொள்வது
மதங்களை அவமதிப்பதாகும்.

- தாகூர் 

குறைகளைக் கண்டு உள்ளூரச் சிரித்துக்கொள்ளும்போது
எனது மனச் சுமை குறைகிறது.

- தாகூர் 

உலகத்தோடு தனக்குள்ள உறவை
மனிதன் உணராவிட்டால்
அவன் வாழுமிடம் சிறைக்கூடமாகும்.

- தாகூர் 


பகலவன் மறைந்ததற்காக அழுதால்
நட்சத்திரங்களைக் காண முடியாது.

- தாகூர் 

உலகை நடத்துகின்ற அறிவாகவும்,
எல்லாப் பொருள்களுக்கும் ஒளியாகவும், உயிராகவும்
எவன் ஒருவன் இருக்கிறானோ அவனே பிரமன் ஆவான்.

- தாகூர் 

உங்கள் அன்பை இரகசியமாக வைத்திருக்காதீர்கள்.

-தாகூர்


மண்ணிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது ஒரு மரத்திற்கு சுதந்திரம் ஆகாது.

-தாகூர் 

என் குறைகளைக் கண்டு நானே உள்ளூரச் சிரித்துக் கொள்ளும்போது
எனது மனச்சுமை குறைகிறது.

-தாகூர்

ஈகையுள்ளம் கொண்டவனுக்கு 
தைரியம் அவசியமில்லை.
ஏனெனில் தாராளம் என்ற கை, 
தைரியம் என்ற கையைவிட வலிமையானது.

- தாகூர்