மனிதனின் இயல்பு
மூலிகையாகவும் வளரலாம்,
களைகளாகவும் வளரலாம்.
உரிய காலத்தில்
மூலிகைக்கு நீர் வார்த்து
களையை அழிக்கவேண்டும்.

- பிரான்சிஸ் பேகன்


அதிர்ஷ்டம் போய்விட்டால் 
உன் கைத்தடியே பாம்பாகும். 

- பிரான்சிஸ் பேகன் 



நான் மனிதர்களைத்  தான் படித்துள்ளேன்; 
புத்தகங்களை அல்ல. 

 - பிரான்சிஸ் பேகன் 


அதிகாரத்தை நாடி
சுதந்திரத்தை பறிகொடுப்பது
விபரீத ஆசை.

- பிரான்சிஸ் பேகன்

பெண்ணில்லாத வீட்டிற்கும்
வீட்டிலில்லாத பெண்ணிற்கும்
மதிப்பில்லை.

- பிரான்சிஸ் பேகன்





சொல்லில் இங்கிதம் என்பது
திறமையாகப் பேசுவதை விட சிறந்தது.

- பேகன்



ஒருவனின் சாதாரண செலவுகள்
அவன் வருவாயில்
பாதி அளவில் தான் இருக்க வேண்டும்.

- பேகன் 



நான்கு பொருள்களில் முதுமை சிறந்தது.
எரிப்பதற்கு பழைய மரம்;
குடிப்பதற்கு பழைய மது;
நம்புவதற்கு பழைய நண்பர்கள்;
படிப்பதற்கு பழைய நூலாசிரியர்கள்.

- பிரான்சிஸ் பேகன்




மனிதனின் இயல்பு
மூலிகையாகவும் வளரலாம்,
களைகளாகவும் வளரலாம்.
உரிய காலத்தில் மூலிகைக்கு நீர் வார்த்து
களையை அழிக்கவேண்டும்.

- பிரான்சிஸ் பேகன்


பழி வாங்குவதில் கருத்துள்ளவன்
பிறர் தந்த புண்ணை ஆற விடுவதில்லை.

- பேக்கன்


சுய மரியாதை தான்
மதத்திற்கு அடுத்தபடியாக
பாவங்களைத் தடுக்கப் பயன்படும்
கடிவாளமாகத் திகழ்கிறது.

-பேக்கன்



சட்டம் மதிப்புக்குரியது. 
காரணம் அது சட்டம் என்பதால் அல்ல,
அதில் நியாயம் இருக்கிறது என்பதால்.

-பிரான்சிஸ் பேகன்