எல்லாமும் அழிவதை பார்த்துக் கொண்டே
தன் வாழ்வு மட்டும் நிலையானது
என்று எண்ணி மனித மனம்
துன்பத்துக்கு ஆளாகிறது.

- புத்தர்


குழந்தையாய் பிறந்து வளர்ந்து
சிறுவனாகி வாலிபனாய் மகிழும் நாம்
வயது முதிர்ந்து இறப்பதை விரும்புவதில்லை .

- புத்தர் 



உண்மை பேசுங்கள்;
கேட்டவர்க்கு இயன்றதைக் கொடுங்கள்;
இந்த இரு வழிகளாலும் ஒருவன்
தேவர்களின் சந்நிதியை அடையலாம்.

- புத்தர்




நம் நல் செயல்களும்
நம் தீய செயல்களும்
நம்மை நிழல் போல
ஓயாது தொடர்ந்து வருகின்றன.

- புத்தர்


ஏதோ ஒன்றை இழப்பதன் மூலம்
ஏதோ ஒன்றை பெறப் போகிறோம் என்று
சமாதானம் அடையும் மனதில்
இழப்பு இலகுவாகி
நம்பிக்கை துளிர் விட ஆரம்பிக்கிறது.

- புத்தர்


சிந்தனை எதுவோ
அதுவாகவே நீயாகிறாய் .

- புத்தர்




அமைதியை விட
மேலான மகிழ்ச்சி
வேறெதுவுமில்லை

- புத்தர்


அதனதன் தன்மை அறிந்தே
நம்பிக்கை வைக்க வேண்டும்.

-புத்தர்


நமது உதடுகளை
அரண்மனை வாயிற் கதவுகளைப் போல
பாதுகாக்க வேண்டும்.
நமது வாயிலிருந்து வெளிப்படும்
ஒவ்வொரு சொல்லும்
சாந்தமானதாகவும் இதமாகவும் இருக்க வேண்டும்.

-புத்தர்



ஒவ்வொரு மாற்றத்திற்கும்
ஒரு காரணம் உண்டு.
காரணமின்றி விளைவில்லை.

- புத்தர்


பெருமையின் சிகரத்தை
எட்டியதெல்லாம் வீழ்ச்சியடையும்.
தோன்றுவதெல்லாம் நிச்சயம் அழியும்.

- புத்தர்


சோம்பலும் சோர்வும் கொண்டு
நூறு ஆண்டுகள் வாழ்வதை விட
ஒரு நாளேனும் பெரு முயற்சியோடு
வாழ்ந்திருத்தல் மேலானது.

- புத்தர் 



நம் நல்செயல்களும் நம் தீய செயல்களும்
நம்மை நிழல் போல ஓயாது தொடர்ந்து வருகின்றன.

- புத்தர்


அதிகமாக பேசுவதால் மட்டும் 
ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான்.

-புத்தர் 



மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை;
அவன் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறான்.

- புத்தர் 



பூக்களின் வாசனை காற்றுடன் மட்டும் தான் செல்லும்;
நல்லவர்களின் புகழ் காற்றினையும் எதிர்த்து கடந்து செல்லும்.

-புத்தர்



ஏதோ ஒன்றை இழப்பதன் மூலம்
ஏதோ ஒன்றைப் பெறப் போகிறோம்
என்று சமாதானம் அடையும் மனதில்
இழப்பு இலகுவாகி
நம்பிக்கை துளிர்விட ஆரம்பிக்கிறது.

-புத்தர்

உண்மை பேசுங்கள்; 
கேட்டவர்க்கு இயன்றதைக் கொடுங்கள்;
இந்த இரு வழிகளாலும் ஒருவன் 
தேவர்களின் சந்நிதியை அடையலாம்.

-புத்தர்



எந்தக் காலம் காயை கனியாக்குகிறதோ,
அதே காலம் கனியை அழுகவும் செய்கிறது.

-புத்தர்