ஒரு மனிதனின் தகுதி, திறமை பெறவே
பள்ளியில் பயிற்சிக்கு வருகிறான் .
ஆனால் அந்த பள்ளியில் படிக்கவும்,
பயிற்சி பெறவும் தகுதி திறமை வேண்டுமென்றால்
இது எத்தனை அயோக்கியத்தனமான கொடுங்கோன்மை.

- பெரியார்


இலட்சியத்தை அடைவதற்காக
கஷ்ட நஷ்டம் என்ற விலையைக் 
கொடுத்தே ஆகவேண்டும்.

-பெரியார் ஈ.வெ. ரா.



மாறுதலுக்கு வளைந்து கொடுக்காத 
மனிதன் மாள வேண்டியதுதான்.

-தந்தை பெரியார் 



சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு.
பகுத்தறிவுக்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட 
எதையும் நீக்க வேண்டும்.

-தந்தை பெரியார் 



நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம்,
வேப்பெண்ணெய் தேன்ஆகலாம்.
ஆனால், பதவியேற்றவன் 
யோக்கியனாக இருக்கவே முடியாது.

-தந்தை பெரியார்



ஒழுக்கத்துடன் நடந்தால், 
உண்மையை ஒழிக்காமல் 
எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், 
அதற்கு தனிசக்தி உண்டு

-தந்தை பெரியார் 



மற்றவர்களிடம் பழகும் விதத்தையும், ஒழுக்கத்தையும்
சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் 
கற்றுக் கொண்டானானால் அவனே
வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.

-தந்தை பெரியார்


ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

- தந்தை பெரியார்


வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு 
என்று மட்டும் கருதக் கூடாது,
அது மற்றவர்கள் நலனுக்கும்
என்று கருத வேண்டும்.

-தந்தை பெரியார்



மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் 
சமூகத்தின் முதல் பகைவன்.
விதியை நம்பி மதியை இழக்காதே.

-தந்தை பெரியார்



மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் 
கெடுப்பது மது.

-தந்தை பெரியார்



பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.

-தந்தை பெரியார்



ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், 
அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம். 
ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் 
எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.

-தந்தை பெரியார்




கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், 
பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும்
மக்களை உயர்த்தும்.

- தந்தை பெரியார்



மற்றவர்களின் ஆதிக்கத்திலோ, ஒவ்வொரு காரியத்துக்கும் மற்றவர்களை எதிர் பார்த்தோ, அல்லது தனக்கு மற்றவர்கள் வழி காட்டக்கூடிய நிலையிலோ இல்லாமல் சுதந்திரத்தோடும் சுய அறிவோடும் வாழத் தகுதியுடைவர்களாக மாற்றுவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்.

-தந்தை பெரியார்



மனிதனை மதம் மிருகமாக்கும்,
சாதி சாக்கடையாக்கும்.

-தந்தை பெரியார் 



உலகில் சந்தோஷமாக வாழ்பவர்கள் 
இருவர் மட்டுமே. 
ஏமாற்றும் அரசியல்வாதிகளும், 
கடவுள் பெயரை சொல்லும் சாமியார்களும்.

-தந்தை பெரியார்



நான் என் ஆயுள் உள்ளவரை 
யாரிடமும் ஓட்டுக் கேட்க மாட்டேன்;
எனக்காக இரண்டு 
புகழ் வார்த்தைகள் சொல்லும்படி
யாரிடமும் எதிர்பார்க்க மாட்டேன்.

-தந்தை பெரியார் 



ஒழுங்காகத் தன்னை நடத்தி, உண்மையை மறைக்காமல்
எல்லாவற்றிலும் நேர்மையை கடை பிடிப்பவனுக்கு
அது ஒரு தனிப்பட்ட பலம் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

-தந்தை பெரியார் 



சுய மரியாதை கல்வி மற்றும் 
அறிவார்ந்த குணங்கள் மட்டுமே
கீழ் தட்டு மக்களை முன்னேற்றும்.

-தந்தை பெரியார்