Pages
முகப்பு
தலைப்புகள்
அறிஞர்கள்
முகநூல் பக்கம்
கடந்த கால நினைவலைகள்
மனிதனை அறிவாளி ஆக்குவதில்லை;
வருங்காலம் பற்றிய பொறுப்புணர்ச்சியே
அறிவாளிக்கு அடையாளம்.
- பெர்னாரட்ஷா
சூழ்நிலைக்கேற்ப தன்னை
மாற்றிக்கொள்பவர்களே
வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.
- பெர்னாட்ஷா
பெண்களிலே
இரு பிரிவினரே உண்டு;
அழானவர்கள் ஒன்று;
அழகானவர்கள் என்று
நம்பிக் கொண்டிருப்பவர்கள் மற்றொன்று.
- பெர்னாட்ஷா
நெற்றியைக் காயப் படுத்துவதை விட
முதுகை வளைத்துச் செல்வது நல்லது.
- பெர்னாட்ஷா
செயல்புரியும் ஆற்றல் உள்ளவன்
செயல் புரிவான்;
அது இல்லாதவன்
வெறுமனே பேசிக்கொண்டு இருப்பான்.
-பெர்னாட்ஷா
பணம் ஆறாம் அறிவு போன்றது;
அதில்லாமல்
மற்ற ஐந்து அறிவுகளையும்
நீங்கள் பயன்படுத்தமுடியாது.
-பெர்னாட்ஷா
என்றுமே
புத்தம் புது அறிவு
முதிர்ந்த அறிவுடன்
முரண்படுகிறது .
-பெர்னாட்ஷா
பல்வலி கொண்டவனுக்கு
அவனைத் தவிர உலகில் அனைவருமே
ஆனந்தமாக வாழ்வதாகத் தோன்றும்.
-பெர்னாட்ஷா
உண்மையை சொல்வது தான்
உலகிலேயே மிகப் பெரிய நகைச்சுவை.
- பெர்னாட்ஷா
நீ இறக்கும் போது கடவுளை
உனக்கு கடன் பட்டவனாக ஆக்கவேண்டும்.
அப்படி நீ வாழ வேண்டும்.
- பெர்னாட்ஷா
வாழ்க்கை, எல்லோரையும் ஒரே மட்டமாக்குகிறது.
மரணம் தான் மேலோரைப் புலப்படுத்துகிறது.
- பெர்னாட்ஷா
நண்பர்கள் இருப்பது நல்லது.
ஆனால் அவர்களின் உதவியை
நாடுவது நல்லதல்ல.
- பெர்னார்ட்ஷா
பசிக்காத போதும் உண்பவன்
தன் பற்களாலேயே
தனக்கு சவக்குழி பறிக்கிறான்.
- பெர்னார்ட்ஷா
நல்லொழுக்கம் என்பது
உனக்கு நீயே அளித்துக்கொள்ளும்
நன்மதிப்பாகும்.
- பெர்னாட்ஷா
உழைப்பால் களைப்பு அடைகிறவர்களே
உண்மையான இன்பம் காணுகிறார்கள்.
- பெர்னார்ட்ஷா
அனுபவம் ஒரு கடுமையான வாத்தியார்,
அது சோதனையைத் தந்த பிறகுதான்
பாடத்தை போதிக்கிறது.
- பெர்னாட்ஷா
உண்மையை சொல்வதுதான் என்னுடைய நகைச்சுவை முறை.
உண்மைதான் உலகத்தின் மிகச் சிறந்த நகைச்சுவை.
-பெர்னார்ட்ஷா
இயல் உணர்வு இல்லாத அறிவுக்கு மடத்தனம் என்று பெயர்;
இயல் உணர்வுடன் கூடிய அறிவுக்கு விவேகம் என்று பெயர்.
-பெர்னாட்ஷா
நீங்கள் கொடுத்த அடியை
திருப்பிக் கொடுக்காதவனிடம்
எச்சரிக்கையாக இருங்கள்.
ஏனென்றால் அவன் உங்களை
மன்னிக்கவோ அல்லது உங்களை நீங்களே
மன்னித்துக்கொள்ளவோ
அவன் தயாராக இல்லை.
-பெர்னாட்ஷா
வாழ்க்கை என்பது ஒரு தீப்பந்தம்,
அதை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்கு முன்
எவ்வளவு பிரகாசமாய் முடியுமோ அத்தனை பிரகாசமாய்
எரியச் செய்யவேண்டும்.
-பெர்னாட்ஷா
Older Posts
Home