நீங்கள் செய்யும் தர்மம்
ஒரு போதும் உங்கள்
செல்வதை குறைக்காது.
- நபிகள் நாயகம்
ஒரு விதையை விதைத்தால்
அதில் முளைத்த கதிர்களிலிருந்து
பல விதைகள் கிடப்பது போல
துன்பத்திலிருப்பவர்க்கு
உங்கள் செல்வத்திலிருந்து அளிப்பீர்களானால்
உங்களுக்கு இருமடங்காக
அதை திருப்பித் தருவேன்.
- திருக்குர்ஆன்
இவ்வுலகில் புரியும் நன்மைகளே
உண்மையான செல்வம்.
- நபிகள் நாயகம்
உங்களில் பலசாலி யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? கோபம் வரும்போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவரே பலசாலியாவார். - முஹம்மது நபி
இனிமையான பேச்சும்
ஒரு விதத்தில்
தர்மம் தான்.
- நபிகள் நாயகம்
நாம் யாருக்கும் மேலல்ல;
யாரும் நமக்கு மேலோர் அல்ல.
-முஹம்மது நபி
நெருப்பு
விறகைத் தின்பது போல
கபடமும், பொறாமையும்
நன்மைகளைத் தின்றுவிடும்.
- முகமது நபி
ஒருவரின் சுமையை
மற்றவர்கள் சுமக்க மாட்டார்கள்.
- திருக்குர்ஆன்
எவரால் மனித இனத்துக்கு நன்மை ஏற்படுகிறதோ
அவரே மனிதரில் சிறந்தவர்.
- முகமது நபி
நின்று கொண்டிருக்கும்போது கோபம் வந்தால்
உட்கார்ந்து கொள்ளுங்கள்;
அப்போதும் சீற்றம் தனியாவிட்டால்
சற்று சாய்ந்து படுத்துக் கொள்ளுங்கள்.
- முகமது நபி
நோயாளியைப் பார்க்க
ஒரு மைல் தூரம் செல்;
இரண்டு பேர்களிடையே சமாதானம் செய்ய
இரண்டு மைல் தூரம் செல்;
ஒரு நண்பனைக் காண
மூன்று மைல் தூரம் செல்.
-நபிகள் நாயகம்
ஒரு விதையை விதைத்தீர்களானால்
அதில் முளைத்த கதிர்களிலிருந்து
பல விதைகள் கிடைப்பது போல
துன்பத்திலிருப்பவர்க்கு
உங்கள் செல்வத்திலிருந்து அளிப்பீர்களானால்
உங்களுக்கு இரு மடங்காக
அதை திருப்பித் தருவேன்.
-திருக்குர்ஆன்
குழப்பம் விளைவிப்பது
கொலையை விட
மிகக் கொடியதாகும்.
-திருக்குர்ஆன்
நீங்கள் மன்னியுங்கள்;
நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்.
-நபிகள் நாயகம்
மெளனமாக இருப்பதைக் காட்டிலும்
நல்லதை வெளியே சொல்லிவிடுவது நல்லது;
கெட்டதை வெளியே சொல்வதை விட
மெளனமாக இருந்து விடுவது நல்லது.
- முஹமத்
எண்ணத்தைக் கொண்டே
செயல்கள் தீர்மானிக்கப்படும்.
-நபிகள் நாயகம்
மக்கள்,
இறைவனால் அளிக்கப்பட்ட
இரண்டு லாபங்களை
எப்போதும் மறந்து விடுகிறார்கள்.
ஒன்று நேரம்;
மற்றொன்று ஆரோக்கியம்.
- முகம்மது நபி
பணிவு என்ற பண்பு இல்லாதவன்
வேறு எந்த நற்குணம் இருந்தும் இல்லாதவனே.