வருவதும் போவதும் இன்பமும் துன்பமும்;
வந்தால் போகாதது புகழும் பழியும்;
போனால் வராதது மானமும் உயிரும்;
தானாக வருவது இளமையும் மூப்பும்;
நம்முடன் வருவது பாவமும் புண்ணியமும்.

- வாரியார்



அன்பும் மரியாதையும் இருப்பவன்
உலகத்தில் எதையும் சாதித்து விடுவான்.
தீமை செய்பவனும் அவனிடம் பணிவான்.

- வாரியார் 


பயிர் செய்யும்போது
ஒருவன் தனியாக உழைக்கிறான்.
அறுவடை செய்யும்போது
நண்பர்கள் சுற்றி வளைக்கிறார்கள் .

- வாரியார்


இதயத்திலிருந்து பிறக்கும் அன்பே பண்பு.
மூளையிலிருந்து தோன்றும் கூற்றே அறிவு.
அறிவை விட பண்பே உலகுக்குத் தேவை.

-வாரியார்