பெரும் சாதனை செய்வதற்கு
மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும்.
அவை ஏளனம், எதிர்ப்பு, அங்கீகாரம்.

-விவேகானந்தர்


புன்னகையின் வழியாகவும் அழுகையின் வழியாகவும்
நாம் பல பாடங்களை கற்றுக்கொண்டே இருக்கிறோம்.
அனுபவம் ஒன்று தான் மிகச்சிறந்த ஆசிரியர்.

- விவேகானந்தர்


உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது
காலமும் இடமும் கூட ஒரு பொருட்டல்ல ;
நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக்கூடியவன்;
சர்வ வல்லமை படைத்தவன்.

-சுவாமி விவேகானந்தர்



அன்பு, நேர்மை, பொறுமை
ஆகியவற்றை தவிர வேறொன்றுமே
நமக்குத் தேவையில்லை.
அன்பு தான் வாழ்க்கை ஆகும்.

- சுவாமி விவேகானந்தர்


இதயப்பூர்வமான காரியங்களை செய்பவனுக்கு
இறைவன் உதவி புரிவான்.
உன்னால் இயன்றவரை
நற்செயல்களை செய்.

- விவேகானந்தர்


ஒரு மனிதனால் செய்யக் கூடிய சாதனையை
இன்னொரு மனிதனாலும்
நிச்சயமாக செய்ய முடியும்.

- சுவாமி விவேகானந்தர்


ஒரு நிமிட கோபத்திலிருந்து
நீங்கள் தப்பி விட்டீர்கள் என்றால்
துக்கமான நான்கு நாட்களிலிருந்து
தப்பி விட்டீர்கள் என்று அர்த்தம்.

- சுவாமி விவேகானந்தர்


பகை, பொறாமை ஆகியவற்றை
நீ வெளியிட்டால்
அவை வட்டியும் முதலுமாக
மீண்டும் உன்னிடமே
திரும்பி வந்து சேர்ந்து விடும்.
வேறு எந்த சக்தியாலும்
அவற்றை தடுத்து நிறுத்த முடியாது.

- விவேகானந்தர்



இன்பத்தை விட துன்பமே
சிறந்த ஆசிரியராக நமக்கு
பாடம் கற்பிக்கிறது.

- விவேகானந்தர்



ஒவ்வொரு மனிதனும்
முதலில் தன்னிடம்
நம்பிக்கை வைக்க வேண்டும்;
எதையும் சாதிக்கும் ஆற்றல்
நம்மிடம் இருக்கிறது
என்று நம்ப வேண்டும்;
நீங்கள் சாதனைகளை செய்யப் பிறந்தவர்கள்
என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.

- விவேகானந்தர்


விலங்கை மனிதனாகவும், 
மனிதனைக் கடவுளாகவும் 
உயர்த்துவதே மதத்தின் நோக்கமாகும்.

-விவேகானந்தர்



மனிதனுக்கு
துன்பமும் நோயும் இருக்கிறவரை
இறை நம்பிக்கையும் சோதிட நம்பிக்கையும்
போகாது.

- விவேகானந்தர்


இந்தியா வேண்டி நிற்பது
இளைஞராகிய ஆண்மக்களில்
ஓராயிரம் பேரேனும் செய்யும் தியாகத்தையே.

-விவேகானந்தர்



எனது துணிவுடைய இளைஞர்களே
நீங்கள் அனைவரும் பெரும் பணிகளைச்
செய்யப் பிறந்தவர்கள்எ ன்பதில்
நம்பிக்கை கொள்ளுங்கள்.
வானத்தில் முழங்கும் இடிக்கும் அஞ்சவேண்டாம்.
நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள்.

-விவேகானந்தர்


சீர்திருத்தம் என்பது
சிதைப்பதல்ல;
புதுப்பிப்பது.

-விவேகானந்தர்



உங்கள் விதிக்கு நீங்களே காரணம்
என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் விரும்புகின்ற வலிமையையும் உதவியும்
உங்களுக்குள்ளேயே இருக்கின்றன.
உங்கள் எதிர்காலத்தை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்.
உங்கள் ஒவ்வோர் வார்த்தையும்
ஒவ்வோர் எண்ணமும்
அதற்கு ஏற்ற பலனை உண்டாக்கும் என்பதை
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

-விவேகானந்தர்



நாம் எல்லோருமே நம்மைப் பற்றி
மிகப் பெரிதாக எண்ணிக்கொள்கிறோம்.
நமது விருப்பத்தை விட
தகுதிக்கேற்பவே நமக்குக் கடமைகள் வந்து சேர்கின்றன.
எனவே எந்த வேலையாயினும்
இறைவனை நினைத்து
பலன் கருதாமல் செயல்புரியுங்கள்.
உயர்ந்த பலனைப் பெறுவீர்கள்.

-விவேகானந்தர்


எதிர்காலத்தைப் பற்றியே
எப்போதும் எண்ணிக்கொண்டிருப்பவனால்
எந்தக் காரியமும் செய்ய முடியாது.
உண்மையானது நல்லது என்று
நீ எத்தனைப் புரிந்து கொண்டாயோ
அதனை உடனே நிறைவேற்று.

-விவேகானந்தர்


மிகக் கொடிய பகைவனிடத்தும்
செம்மையான இதமான மொழியையே
பயன்படுத்த வேண்டும்.

-சுவாமி விவேகானந்தர்