உறுதியைப் போல உழைப்பும் இருந்தால்
நீ வெற்றி காணுவாய்.

-ஷெல்லி 



சாதாரண செயல்கள் கூட
அன்புடன் கலந்தால்
அழகு பெறுகின்றன.

-ஷெல்லி


மன உறுதி மட்டும் இருந்தால் போதாது, 
அந்த உறுதியைப் போலவே
செயல் ஊக்கத்துடன் கூடிய 
உழைப்பும் சேர்ந்தால் தான்
வெற்றிக்கு வழி வகுக்கும்.

-ஷெல்லி   



நாம் படிக்க படிக்கத் தான் 
நம்மிடமுள்ள அறியாமையை 
கண்டு கொள்கிறோம்.

-ஷெல்லி 




நமக்கு தாய் தந்தை வாய்ப்பது விதி, 
நண்பர்கள் வாய்ப்பதோ மதி.

-ஷெல்லி



எத்தனை முடியுமோ அத்தனை சம்பாதி;
எத்தனை முடியுமோ அத்தனை சேமி;
எத்தனை முடியுமோ அத்தனை பிறர்க்கு கொடு;

-கே.வெல்லி