பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் கஷ்ட நஷ்டங்களே
ஆசிரியர்கள்.
- ஷேக்ஸ்பியர்
வாழ்க்கையில் வெற்றி பெற மூறு வழிகள்:
1. பிறரைக் காட்டிலும் அதிகமாக அறிந்துகொள்ள முயலுங்கள்.
2. பிறரைக் காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
பெரும்பாலும் முதல் சிந்தனை
தெளிவற்றதாக இருக்கும்;
எதற்கும் மறு சிந்தனை செய்யுங்கள்.
- ஷேக்ஸ்பியர்
நாம் எழுத்தால்
புத்தகத்தால்
சண்டையிடுகிறோம்.
-ஷேக்ஸ்பியர்
பழி வாங்குதல் வீரமன்று
பொறுப்பதே வீரம்.
- ஷேக்ஸ்பியர்
சட்டத்தின் மிக முக்கியமான பண்பு இரக்கமே.
ஆனால் இரக்கமற்ற கொடியவர்களோ
அதை கொடிய ஆயுதமாக உபயோகிக்கிறார்கள்.
- ஷேக்ஸ்பியர்
உண்மையைச் சொன்னால்
காதலுக்கும் நியாயத்திற்கும்
இப்பொழுதெல்லாம்
உறவு அதிகமில்லை.
-ஷேக்ஸ்பியர்
அழகியப் பெண் வாதாடும்பொழுது
எல்லாப் பேச்சாளர்களும்
ஊமையாகி விடுகிறார்கள்.
- ஷேக்ஸ்பியர்
புனிதமற்ற மனிதர்கள் அதிகாரம் செலுத்தும்போது
கௌரவமான பதவி தனி உடமையாகி விடுகிறது.
- ஷேக்ஸ்பியர்
எவர் பேசுவதையும் கேட்டுக்கொள்;
ஆனால் சிலரிடமே பேச்சு கொடு.
எவர் துன்பத்தையும் தெரிந்து கொள்;
ஆனால் உன் கருத்தை கூறிவிடாதே.
-ஷேக்ஸ்பியர்
தைரியமே நம்முடைய
மிக நெருங்கிய நண்பன்.
- ஷேக்ஸ்பியர்
உண்மைக் காதல்
கண்களால் வருவதில்லை
மனத்தால் வருகிறது.
- ஷேக்ஸ்பியர்
முயற்சி என்பது ஒரு தடாகம்.
அதில் நீந்தி கரை சேரும்போது
ஏற்படுவது போன்ற இன்பம்
உலகத்தின் வேறு எந்த ஒன்றிலும்
கிட்டுவதில்லை.
-ஷேக்ஸ்பியர்
வேகமாக ஓடுபவர்கள் தடுக்கி விழுவார்கள்.
அறிவோடு மெதுவாகச் செல்லவேண்டும்.
- ஷேக்ஸ்பியர்
கவலை
வாழ்க்கையின் எதிரியாகும்.
-ஷேக்ஸ்பியர்
அனுபவம் ஓர் உயர்ந்த நகை.
அது அரியதாகத்தான் இருக்கும்.
ஏனெனில், மிகவும் கூடுதலான
விலை கொடுத்தே வாங்கப்பட்டிருக்கிறது.
-ஷேக்ஸ்பியர்
அரக்க வலிமை பெற்றிருப்பது மேன்மையானது;
அரக்கனைப் போல் அதைப்