Pages
முகப்பு
தலைப்புகள்
அறிஞர்கள்
முகநூல் பக்கம்
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி
எந்தச் செயலையும் செய்யாமல்
பின்வாங்குவது இழிவானது.
- ஹென்றி போர்ட்
உங்களால் ஒரு காரியத்தை
முடிக்க முடியும் என்றால்
முடியும்;
முடியாது என்றால்
முடியாது.
இதுவே மனதின் அரிய சக்தி.
- ஹென்றி போர்ட்
ஒன்றுக்கும் பயனற்றவர் என்று
தள்ளி விடும்படியாக எவரும் இல்லை.
சமயம் வரும்போது வேறு ஏதாவது ஒரு வகையில்
எவரும் பயன்படக்கூடும்.
- ஹென்றி போர்ட்
பிரியமான வேலை எதுவும் கஷ்டமானதே அல்ல.
-ஹென்றி போர்ட்
ஒரு மனிதன் ஜெயிலிலிருந்து வந்தாலும்
கல்லூரியிலிருந்து வந்தாலும் ஒன்றுதான்.
மனிதனைத் தான் வேலைக்கு அமர்த்துகிறோம்.
அவன் சரித்திரத்தையல்ல.
- ஹென்றி போர்ட்
எனது வாழ்க்கையின் ரகசியம் மூன்று.
நான் அதிகம் உண்பதில்லை,
அதிகம் கவலைப்படுவதில்லை,
எது நடந்தாலும் நன்மைக்கே
என மகிழ்ச்சியுடன் ஏற்பேன்.
-ஹென்றி போர்ட்
அதிக செலவும்
முட்டாள்தனமான சிக்கனமும்
தீமையே விளைவிக்கும்.
-ஹென்றி போர்ட்
Older Posts
Home