சின்னஞ்சிறு அனாவசிய செலவுகளைப் பற்றி
எச்சரிக்கையாக இரு;
ஏனெனில் சிறிய ஓட்டை தான்
பெரிய கப்பலையும் மூழ்கடித்து விடும்.

- பிராங்கிளின்


மருந்துகளில் சிறந்தவை
ஓய்வும் உண்ணா நோன்பும்.

- பிராங்கிளின்


பைசாவை
நீங்கள் கவனித்தால்
போதும்;
ரூபாய்கள்
தாங்களே தங்களை
கவனித்துக்கொள்ளும்.

- பிராங்கிளின்


மகிழ்ச்சி என்பது ஒரு வண்ணத்துப்பூச்சி போல
அதை துரத்திக்கொண்டே போனால்
பிடிக்கு அகப்படாமலேயே போய்க்கொண்டேயிருக்கும்.
ஆனால் பேசாது அமைதியாக உட்கார்ந்து கொண்டால்
அது உங்கள் மீது வந்து உட்காரும்.

- பெஞ்சமின் பிராங்கிளின்


உங்கள் விரோதிகள் சொல்வதைக்
கூர்ந்து கேளுங்கள்;
ஏனெனில்
அவர்கள் தாம் உங்கள் குறைகளை
சரியாக சுட்டிக்காட்டக் கூடியவர்கள்.

- பிராங்க்ளின்


சுமூகமாயிருத்தல் என்பது
விலையின்றி கிடைக்கும் ;
ஆனால் அதைக் கொண்டு
அனைத்தையும் வாங்கமுடியும்.

- பிராங்க்ளின்




வருவாய்க்கு குறைவாக செலவு செய்ய
நீங்கள் கற்றுக்கொண்டால்
உங்களை விட பணக்காரர்
எவருமில்லை.

- பிராங்கிளின்


குறுகிய காலத்தில் பணக்காரனாக விரும்பினால்
உங்கள் அறிவை விடா முயற்சியுடன் செயல்படுத்துங்கள்.
நேர் வழியில் வெல்ல
உங்கள் அறிவால் உணர்ந்த
ஒரே ஒரு நல்ல யோசனை போதும்.
இந்த நிமிடமே நன்கு சிந்தித்து
ஓர் லட்சியத்தை உருவாக்குங்கள்.

- பெஞ்சமின் பிராங்க்ளின்



ஒரு தீமையை
ஊட்டி வளர்ப்பதானது
இரண்டு குற்றக் குழந்தைகளை
உற்பத்தி செய்வதற்கு சமமானது.

-பிராங்க்ளின்



உழைப்பவனின் வீட்டிற்குள்
பசி எட்டிப் பார்க்குமே தவிர
உள்ளே நுழைந்து விடத் துணியாது.

- பிராங்க்ளின்


அதிக அறிவு இல்லாததால் யாரும் 
அதிகம் நஷ்டம் அடைந்ததாக சரித்திரம் இல்லை.
ஆனால் பலரது கஷ்டங்களுக்கு 
மிக முக்கியமான காரணம் 
அவர்களது கவனக் குறைவுதான். 
எதிலும் கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.

-பெஞ்சமின் பிராங்க்ளின்


நம்பிக்கையால் பார்க்க வேண்டுமானால்
பகுத்தறிவுக் கண்ணை மூடிக் கொள்ள வேண்டும்.

- பிராங்க்ளின் 


கடினமான இதயத்தை உடையவன்
கடவுளிடமிருந்து நீண்ட தூரம் விலகி இருக்கின்றான்.

- பிராங்க்ளின் 


ஒவ்வோர் ஆண்டும் ஒரு தீய பழக்கத்தை
வேரோடு களைந்து விடுங்கள்.

- பெஞ்சமின் 


ஆராய்ந்து அறியும் அறிவு தேவிக்கு
நீங்கள் உடன்படா விட்டால்
அவள் உங்கள் முழங்கால் முட்டியை
சோதித்து விடுவாள்.

- பிராங்க்ளின் 


மூவர் ஓர் இரகசியத்தை காக்க முடியுமென்றால்
இருவர் இறந்திருக்க வேண்டும்.

- பெஞ்சமின் பிராங்க்ளின்



எந்தத் தடையுமே இல்லாமல்
ஒரு பாதை செல்கின்றது என்று சொன்னால்
அது எங்கேயும் போகவில்லை என்று தான் அர்த்தம்.

-பிராங்க்ளின்



மகிழ்ச்சி என்பது
ஒரு வண்ணத்துப்பூச்சி போல
அதைத் துரத்திக்கொண்டே போனால்
பிடிக்கு அகப்படாமலேயே போய்க் கொண்டேயிருக்கும்.
ஆனால் பேசாது அமைதியாக உட்கார்ந்து கொண்டால்
அது உங்கள் மீது வந்து உட்காரும்.

-பெஞ்சமின் பிராங்க்ளின்


பைசாவை நீங்கள் கவனித்தால் போதும்;
ரூபாய்கள் தாங்களே தங்களை கவனித்துக்கொள்ளும்.

- பிராங்க்ளின்


உங்கள் விரோதிகள் சொல்வதைக் கூர்ந்து கேளுங்கள்.
ஏனெனில், அவர்கள் தாம் உங்கள் குறைகளை
சரியாகச் சுட்டிக் காட்டக் கூடியவர்கள்.

-பெஞ்சமின் பிராங்க்ளின்