மனித அறிவைச்
சிறிது நேரம் தடை செய்து நிறுத்தி
அந்த நேரத்திற்குள் பணத்தைக் கறந்து விடும்
கலையே விளம்பரக் கலை.

- ஸ்டீபன் லீக்காக்

நான் எப்போதும் வேகமாகச் செயல்படுபவன்
ஆனால் ஒருபோதும்
நான் பரபரப்புடன் விரைவதில்லை.

-ஜான் வெஸ்லி

எதிராளியின் தோல்வியைக் கண்டு
அதை வெற்றிகரமாகக் கொண்டாடாமல்
பொறுமையாக இருக்க முடியுமானால்
அதுவே இதயத்துக்கு மகத்தான சோதனை.

- எமெர்சன்

பேசுமுன் கேளுங்கள்
எழுதுமுன் யோசியுங்கள்
செலவழிக்குமுன் சம்பாதியுங்கள்
முதலீடு செய்யுமுன் விசாரியுங்கள்
குற்றம் செய்யுமுன் நிதானியுங்கள்
ஓய்வு பெறும் முன் சேமியுங்கள்
இறப்பதற்குமுன் தர்மம் செய்யுங்கள்

- வில்லியம் ஆர்தர்

ஒரு வாய்ப்பற்ற தன்மையால் நாம் இழந்ததை
வேறொரு வாய்ப்பினால் பெறலாம்.

- சௌத்வெல் 

தனிமையாயிருக்க சக்தி இல்லாததாலேயே
சகல துன்பங்களும் விளைகின்றன.

- லாடிரூயர் 

ஆற்றலுக்கு மேலும் கீழும்
சந்தர்ப்பம் எனும் சக்கரங்கள்
சுழன்று கொண்டு இருக்கின்றன.

- தாமஸ் கார்லைல் 

நாம் செய்யும் எந்தக் காரியமும்
நல்ல செயல்களாகவே இருக்க வேண்டும்.

- மகாவீரர்