எந்தக் கண்ணாடியும் 
ஒரு பெண் அழகில்லை என்று 
அவளுக்கு சொல்லியதில்லை.

-பிரான்ஸ் பழமொழி



பலத்தை பலவீனம் அடக்கி ஆளும் 
வினோதம் தான் காதல்.

-கபிலர்


சில சமயம் முட்டாளாய் காட்சியளிப்பது அறிவுள்ள செயல்.

-தாமஸ் ஆல்வா எடிசன்

விறகில் தீ இருப்பதை உணர்ந்தவன் ஞானி. 
அதில் தீ மூட்டி உணவு சமைத்து சாப்பிட்டவன் விஞ்ஞானி.

-பகவான் இராமகிருஷ்ணர்

ஒருவன் மீனை உண்பதற்காக 
இறைவன் அவனைப் புறக்கணித்தால் 
அவன் இறைவனே இல்லை.

-சுவாமி விவேகானந்தர்


வானத்தில் மாளிகை கட்டு தவறில்லை. 
ஆனால் தரையில் அஸ்திவாரம் போடு.

- ஓர் அறிஞர்

எந்தக் காரியத்தையும் உற்சாகத்தோடு செய்கிறவன் தன் நோக்கத்தை தவறுவது அபூர்வம்.

-வால்மீகி

பையிலே பணம் இல்லாதவனுக்கு நாக்கிலே தேன் (இனிமையான வார்த்தை ) இருக்க வேண்டும்.

-வாத்தின்ஸ்

உங்கள் கவலைகளை விளம்பரப் படுத்தி பயனில்லை. 
ஏனெனில் அவற்றை யாரும் வாங்க மாட்டார்கள்.

- லயன்



மேதைக்கு எல்லாம் தெரியும். வாழ்க்கை நடத்த மட்டும் தெரியாது.

- ஓர் அறிஞர்

தவறாக வேண்டுமானால் சிந்தியுங்கள்;
ஆனால் உங்களுக்காக நீங்களே சிந்தியுங்கள்.

- வெஸ்ஸிஸ்


பணக்காரர்களின் உணவை விட 
ஏழைகளின் உணவே அதிகம் ருசிக்கிறது. 
ஏனெனில் ஏழைகள் தான் 
பசித்து உண்கின்றனர்.

- ரிக் வேதம்


கோபம் என்பது குறைந்த அளவு பைத்தியமே.

- ஹௌஜ்



கதவை தட்டாத காரணத்தால் எத்தனையோ வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது.

- பல்கேரிய பழமொழி

புத்தகங்கள் இல்லையென்றால் 
சரித்திரம் மௌனமாகிவிடும். 
இலக்கியம் ஊமையாகிப்போகும். 
புத்தகம் என்பது மனித குலமே 
அச்சு வடிவில் இருப்பது போல.

- பார்பரா சச்மன்


யோசிப்பதானால் ஆழமாக யோசியுங்கள். 
செயல்படுத்துவதானால் தீவிரமாக செயல்படுத்துங்கள். 
விட்டுக்கொடுப்பதானால் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுங்கள். 
எதிர்ப்பதானால் கடைசிவரை எதிர்த்துக் கொண்டிருங்கள்.

- எமெர்சன்







கோபம் என்னும் கொடிய அமிலமானது 
அது எறியப்படும் இடத்தைவிட 
அதை வைத்துக்கொண்டிருக்கும் 
கரத்தையே பெரிதும் நாசப்படுத்திவிடும்.

- கிளாவுண்டல்


புறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது.

- டாக்டர் ராதாகிருஷ்ணன்

இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே. 
என்னால் இயலாது என்று ஒருநாளும் சொல்லாதே. 
ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன்.

- சுவாமி விவேகானந்தர்


பேசுபவனை கவனிக்காதே. பேச்சை கவனி. பேச்சின் நீளம் அதன் மதிப்பை குறைத்துவிடும்.

-ஹசரத் அலி

உடைந்த கைகளை கொண்டு உழைக்கலாம்; 
உடைந்த உள்ளத்தை கொண்டு உழைக்க முடியாது.

- பாரசீக பழமொழி