/* GOOGLE ADS CODE STARTS --*/ /* GOOGLE ADS CODE ENDS --*/ பொன்மொழிகள் Quotes in Tamil: ஆரோக்கியம் aarokyam
அவசியம் நேர்ந்தாலொழிய
புதிய சட்டத்தையும் மருந்தையும்
உபயோகப்படுத்தலாகாது.

- குவார்லஸ்


மருந்துகளில் சிறந்தவை
ஓய்வும் உண்ணா நோன்பும்.

- பிராங்கிளின்


நோயின் தன்மை மூன்று வகையன.
மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒரு வகை;
வந்தாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை;
அடங்கி இருப்பன போல் வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும்
முற்றிலும் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.

-நீலகேசி (காப்பியம்)


மனித மனம் போல்
நெகிழ்ந்து கொடுக்கக் கூடியது
வேறு ஒன்றுமில்லை.
அடைக்கப்பட்ட நீராவிபோல்
அதை அடக்க அடக்க
அழுத்தத்தை எதிர்க்க
அது மேலே எழும்புகிறது..

-த்ரையான் எட்வர்ட்ஸ்



ஆரோக்யமானவனிடம் நம்பிக்கை உண்டு.
நம்பிக்கை உள்ளவனிடம் எல்லாம் உண்டு.

- அரேபிய பழமொழி 



பசிக்காத போதும் உண்பவன்
தன் பற்களாலேயே
தனக்கு சவக்குழி பறிக்கிறான்.

- பெர்னார்ட்ஷா 


மக்கள்,
இறைவனால் அளிக்கப்பட்ட
இரண்டு லாபங்களை
எப்போதும் மறந்து விடுகிறார்கள்.
ஒன்று நேரம்;
மற்றொன்று ஆரோக்கியம்.

- முகம்மது நபி



வெள்ளைப் பூண்டு தாயை விட நல்லது செய்யும்;
கடுக்காய் நூறு தாய்க்குச் சமம்.

-தெலுங்குப் பழமொழி 



நம்பிக்கையே
மனிதனுக்கு நேரும் சகல நோய்களுக்கும்
ஒரே மலிவான மருந்து.

- ஆபிரகாம் கௌலி 



மன நிறைவோடு கூடிய 
மகிழ்ச்சியும், தன்னடக்கமும்
எல்லாவகையான நோய்களையும் 
குணமாக்கும் சிறந்த மருந்துகள்.

- தி பெட்டெர்வே 




மனித வர்க்கம் பயன்படுத்தி வரும் மருந்துகளிலேயே
சக்தி மிக்க மருந்து வார்த்தைகள் தாம்.

- ரூர்யார்ட் கிப்ளிங் 



உன் உடலை ஆரோக்யமாக வைத்துக்கொள்.
மனித உடலைக் காட்டிலும்
சிறந்த புனிதஸ்தலம் வேறு ஒன்றுமில்லை.
கீதை படிப்பதை விட கால்பந்து விளையாடு.

-சுவாமி விவேகானந்தர்


வேண்டாம் என்று அடிக்கடி சொல்லத் தெரிந்தவன் தான்
வாழ்நாள் பூராவும் மனத்தாலும் உடலாலும்
வலு உள்ளவனாக இருப்பான்.

-மக்லேரன்



அளவான உணவு மருத்துவனை விட
அழகாக சிகிச்சை செய்கிறது.

-வில் டூரன்ட்ரூ 


உள்ளத்தின் சோர்விலிருந்து 
விடுதலை தருவது உடலின் உழைப்பு, 
ஏழைகளிடம் இன்பத்தை 
உருவாக்குவதும் இதுவே.

-லா ரோஷ்டிக்கோ 

நோய் இல்லையென்று 
மனதில் உறுதி செய், 
மனம் போல் உடல் அமையும்.

-மகாகவி பாரதி 



மது அருந்த வேண்டும் என்று விரும்புகிறவன்,
நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் எஞ்சினில் 
மண்ணை வைப்பது போல
தன் மூளையை பாழ்படுத்துகிறான்.

- தாமஸ் ஆல்வா எடிசன் 


இறைவன் ஒவ்வொரு நோய்க்கும் 
ஒரு பச்சிலையை அளித்திருக்கிறான்.

-பல்கேரியப் பழமொழி 



வாழ்க்கை வாழ்வதற்கன்று,
ஆரோக்யமாக இருப்பதற்கே.

-மார்ஷியல் 



முதலாவது  செல்வம் ஆரோக்கியம்.

-எமெர்சன்