எவ்வளவு கரடு முரடாயினும்
எப்பொழுதும் சிறந்தததையே தேர்ந்து கொள்;
பழக்கம் அதை எளிதாக்கி
இதயத்தோடு இசைத்துவிடும்.
- பித்தகோரஸ்
மனிதனின் இயல்பு
மூலிகையாகவும் வளரலாம்,
களைகளாகவும் வளரலாம்.
உரிய காலத்தில்
மூலிகைக்கு நீர் வார்த்து
களையை அழிக்கவேண்டும்.
- பிரான்சிஸ் பேகன்
வெற்றி வீரராக, மன்னராக, நீதிபதியாக
ஒருவர் வாழலாம்;
ஆனால்
மனிதனாகத்தான் இறக்கவேண்டும்.
- டேனியல் வெப்ஸ்டர்
நன்மை என்பது
ஆயிரம் தேனீக்கள் ஆயிரங்காலமாக
சிறுகச் சிறுக சேர்த்து திரட்டும்
தேன் போன்றது;
தீமை என்பது
ஒருவன் கண்பட்டு
அந்த தேனடை ஒரு நிமிடத்தில்
அழிவது போன்றது.
- ஜேம்ஸ் ஆலன்
வன்முறையில் இறங்காதீர்கள்;
ஆனால் வன்முறை தேவைப்படும்போது
அதை துணிவுடனும்
இறுதியாகவும், முழுமையாகவும்
பயன்படுத்திவிட வேண்டும்.
- ட்ராஸ்கி
திறந்திருக்கும் கதவு
ஒரு துறவியை கூட
தீமை செய்ய தூண்டும்.
- பழமொழி
எல்லை மீறுபவைகளை எல்லாம்
துன்பம் பின் தொடர்கிறது..
மனிதரின் இயல்புகள் ஒரே தன்மையன.
அவர்களின் பழக்க வழக்கங்கள் தான் அவர்களைப் பிரித்து
பெரிதும் வேறுபடுத்துகின்றன.
- கன்பூசியஸ்
எப்போதும் பிறரை
எழுத்தாலோ பேச்சாலோ செயலாலோ
புண்படுத்தாதவன் எவனோ
அவனே பெரிய மனிதன்.
பெரிய மனிதனுக்கு இலக்கணம் வகுப்பவனும்
அவனே.
-ரஸ்கின்
இது எளிதான செயல்தான் என எண்ணி
பிறர் மனைவியிடம் நெறி தவறி செல்கிறவன்
எப்போதும் அழியாது நிற்கும் பழியை அடைவான்.
-திருவள்ளுவர்
தவறான பாதையில்
எவ்வளவு தூரம் சென்று இருந்தாலும் சரி
பரவாயில்லை
உடனே திரும்பி வாருங்கள்.
-கதே
இளமையில் வளையாத மூங்கில்
கழைக் கூத்தாடியின் காலில் மிதிபடுகிறது;
இளமையில் வளைந்த மூங்கில்
அரசன் கரத்தில் வில்லாகப் பூசிக்கப் படுகிறது.
-வாரியார்
ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தானே தேர்ந்தேடுத்துகொள்ளும் ஒவ்வொரு செயலின் குணங்களைப் பொறுத்துதான் அவனுடைய எதிர்கால வெற்றி தோல்விகள் கணிக்கப்படும்.
-டார்வின்
அளவுக்கு மீறிய செல்வமோ அளவு மீறிய வறுமையோ மனிதர்களை ஒழுக்கம் கெட்டவர்களாகவும் திறமையற்றவர்களாகவும் செய்து விடுகிறது. - பிளாட்டோ
இங்கிதம், மனித நாகரிகத்தில்
மனதை மதிக்கவும் துதிக்கவும்
தெரிந்த இசை.
- எட்வர்ட்
ஒழுங்கீனமான இளமை
எதையும் செய்யத் தூண்டும்.
தற்கொலையைக் கூட.
- ஹென்றிக்
ஒவ்வோர் ஆண்டும் ஒரு தீய பழக்கத்தை
வேரோடு களைந்து விடுங்கள்.