/* GOOGLE ADS CODE STARTS --*/ /* GOOGLE ADS CODE ENDS --*/ பொன்மொழிகள் Quotes in Tamil: குழந்தை Kuzhanthai
உன் குழந்தைகள் தீயோராக இருந்தால்
அவர்களுக்கு சொத்து வைக்க வேண்டாம்;
அவர்கள் நல்லோராக இருந்தால்
உன் சொத்து அவர்களுக்குத் தேவையில்லை.

- பல்கேரிய பழமொழி


ஐந்து வயது வரை செல்லமாக வளர்க்கவும்;
பின் பத்து வயது வரை கண்டித்து வளர்க்கவும்;
பதினாறு வயதான பிறகு நண்பனாகக் கருதி நடத்தவும்.

- சாணக்ய நீதி


யோகக்காரர்களுக்குத் தான்
முதல் குழந்தை
பெண் குழந்தையாகப் பிறக்கும்.

- போர்த்துக்கீசிய பழமொழி























எப்படி உழைப்பதென்று
பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
ஏன் சேமிக்க வேண்டுமென்பதை
தானாகவே கற்றுக்கொள்வார்கள்.



குழந்தைகளுக்கு
ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதைவிட
மகிழ்ச்சியான நிகழ்காலத்தை தருவது
நம் கடமை.

- கேத்தலின் நோரிஸ்




குழந்தையின் பள்ளிக்கூடம்
தாயின் இதயம் தான்.

- துருக்கி பழமொழி


தன் குழந்தையை அதட்டி மிரட்டுபவனை
தந்தையாக உடைய குழந்தைகள்
கட்டாயம் பொய் சொல்லுகிறவர்களாகத்தான்
இருப்பார்கள்.

-இங்கர்சால்



குழந்தையின் முகத்தை
நாம் எப்பொழுது பார்க்கின்றோமோ,
அப்போது நாம்
எதிர்காலம் பற்றி சிந்திக்கின்றோம்.

- டெஸ்மண்ட் டுட்டு


ஒரு செயலை செய்து முடிக்க மூன்று  வழிகள் தாம் உள்ளன.
ஒன்று  அதை செய்யலாம். 
இரண்டாவது அதை வேறு ஒருவரை செய்யச் சொல்லலாம். 
மூன்றாவது உங்கள் பிள்ளைகளிடம் 
அதை செய்யாதே என்று சொல்லலாம்.

- எம்.சேம்பர்சின்


குழந்தைகள் கேள்வி கேட்கும்போது தான்
தகப்பன் தனக்கு எவ்வளவு குறைவாகத் தெரிந்திருக்கிறது
என்பதை உணர்கிறான்.

- மைக்கேல் ப்ளேக் போர்ட் 

ஐந்து வயது வரை செல்லமாக வளர்க்கவும்;
பின் பத்து வயது வரை கண்டித்து வளர்க்கவும்;
பதினாறு வயதான பிறகு நண்பனாகக் கருதி நடத்தவும்.

- சாணக்ய நீதி


தாயார் எவ்வளவு உற்சாகமாக அறிவு புகட்ட விரும்புகிறாளோ
அவ்வளவு உற்சாகமாக குழந்தையும் அதை ஏற்கவிருக்கும்.

- எமெர்சன் 

யோகக்காரர்களுக்குத் தான்
முதல் குழந்தை
பெண் குழந்தையாகப் பிறக்கும்.

-போர்த்துகீசியப் பழமொழி


குழந்தையைச் சிரிக்கச் செய்தாலன்றி
அதற்குக் கல்வி கற்பிக்க முடியாது.

- இராஜாஜி 


ஒருவனின் துன்பத்தை மறக்கடிப்பது
மனைவியும் அவள் அன்பும்
குழந்தையும் அதன் வசீகரப் புன்னகையும் தான்.

-கால்ட்டன் 



குழந்தைகளை முதலில் மனிதராக்குங்கள்;
பிறகு அவர்களை அறிவாளி ஆக்கலாம்.

- ரஸ்கின் 

குழந்தைகள் என்றால் தூய்மையான மழைநீர் போல்.
இந்த உலகத்து மாசும், அழுக்கும் படாத
தூய்மையான நீர் அது.

-டாக்டர் மு.வ.

ஒரு குழந்தையைக் கெடுக்க வேண்டுமாயின் உங்கள் கையில் பிரம்பை எடுங்கள்.

-இங்கிலாந்துப் பழமொழி 

என்னை மிகவும் கவர்ந்த அம்சம், தங்கள் குழந்தைகளுக்குக் கீழ்படிந்து பெற்றோர்கள் நடக்கும் விதம்.

-வின்சர் கோமகன் 

சிறிது அன்பு குழந்தையிடம் காட்டினால் 
அது பன்மடங்கு திரும்பி தன் அன்பைக் கொட்டுகிறது.

-ரஸ்கின்