/* GOOGLE ADS CODE STARTS --*/ /* GOOGLE ADS CODE ENDS --*/ பொன்மொழிகள் Quotes in Tamil: சரி தவறு sari thavaru
மனிதனின் இயல்பு
மூலிகையாகவும் வளரலாம்,
களைகளாகவும் வளரலாம்.
உரிய காலத்தில்
மூலிகைக்கு நீர் வார்த்து
களையை அழிக்கவேண்டும்.

- பிரான்சிஸ் பேகன்


செல்வது சரியான பாதையாக இல்லாதபோது 
வேகமாக ஓடுவதால் என்ன பயன்.

- ஜெர்மானிய பழமொழி 




ஒரே விஷயத்தை
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக
சொல்லியிருப்பார்கள்.
அது அவரவரின் சூழ்நிலையின்
அனுபவத்தில் சொன்னது
அதனைப் புரிந்து
நாம் நம் சூழிநிலைக்குத் தக்கபடி
நமக்கு சாதகமாகவும்
பிறருக்கு பாதகமில்லாமலும்
முடிவெடுப்பது நம்மைப் பொறுத்ததே.




ஒவ்வொரு யுகமும்
பழைய தவறுகளை அம்பலப்படுத்தியபடி உள்ளது.
அதே நேரத்தில் புது தவறுகளை உருவாக்குகிறது.

- தாமஸ் புல்லர்


நேற்று செய்த தவறை ஒப்புக்கொண்டால்
இன்று நீ அறிவாளி ஆவாய்.

- கதே



புரியாத விஷயத்தைப் புகழ்வது தப்பு;
இகழ்வதோ அதைவிட பெரிய தப்பு.

- லியனார்டோ டாவின்சி



தவறு செய்பவர்களைக் காட்டிலும்
அவர்கள் கூட இருப்பவர்கள் தான்
அதிகம் வெட்கித் தலை குனிய
வேண்டியுள்ளது.



ஒரு காரியத்தை ஏன் தவறாகச் செய்தோம்
என்று சொல்வதற்குப் பதில்
அதைச் சரியாகச் செய்து விடலாம்.

-இங்கர்சால்


செய்த தவறை உணர்ந்தால்
தவறு பாதியாக குறைகிறது;
செய்த தவறை நியாயப்படுத்தினால்
தவறு இரட்டிப்பாகிறது.

-ஓர் அறிஞர் 


நீ சரியாக இருந்தால்
கடவுள் உனக்குப் பயப்படுவார்.

- இத்தாலியப் பழமொழி 


தவறு நேருவதால் இழிவு இல்லை.
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி
பின் வாங்குவது தான் இழிவு.

-ஹென்றி போர்ட் 

மனிதராகப் பிறந்த எல்லோரும்
தவறு செய்கிறார்கள்
மூடர்களோ அதை
தொடர்ந்து செய்கிறார்கள்.

- சிசரோ


தவறு செய்யாதவன் சட்டத்தைப் புரட்ட மாட்டான்.

- மெனாண்டர் 

மெதுவாகப் பேசு, 
அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும்;
நல்ல எண்ணத்தோடு இரு, 
அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்,

-வள்ளலார்


தவறான வழிதான் எப்பொழுதுமே
பொருத்தமான வழியைப் போன்ற தோற்றம் அளிக்கிறது.

-ஜார்ஜ் மூர்

குற்றங்கள் மூலம் நியாயங்களைச் சேகரியுங்கள்;
தவறுகளின் மூலம் அனுபவத்தைச் சேகரியுங்கள்;
கர்மத்தின் மூலம் ஞானத்தைச் சேகரியுங்கள்;
நண்பர்களின் மூலம் புத்தியைச் சேகரியுங்கள்.

-கண்ணதாசன்



சத்தியத்தை விரும்புங்கள்;
ஆனால் தவறை மன்னித்து விடுங்கள்.

-வால்டேர்



தவறு செய்வது இயல்பு, 
பழியை பிறர் மேல் 
சுமத்துவதற்குப் பெயர் 
அரசியல்.

-பில் வாஹன்  


கடன் வாங்கி சாப்பிடுவது 
புல்லைப் போட்டு 
அடுப்பு எரிப்பது போல்தான்.

-எமெர்சன்


அவரவருடைய தவறுகளுக்கு 
அவரவர் சூட்டிக்கொள்ளும் பெயரே 
அனுபவம்.

-ஆஸ்கார் ஒயில்ட்