தனிமை கொஞ்சம் வித்தியாசமானது தான்; நினைக்க வேண்டியதை மறக்க வைக்கும்;
மறக்க வேண்டியதை நினைக்க வைக்கும்.
துன்பங்களை
வளர்ப்பதும் தனிமை தான்;
தணிப்பதும் தனிமை தான்.
உலாவ செல்லும் போது
கூட வருவதற்கு
தனிமையைப் போன்ற
சிறந்த தோழன் கிடைக்க மாட்டான்.
- தோசோ
மிகவும் மரியாதைக்குரியவர் அன்னையே;
மிகவும் கசப்பானது தனிமையே;
மிகவும் துயரமானது மரணமே.
நீ சோம்பலாக இருக்கும்போது தனியாகவும்
தனியாக இருக்கும்போது சோம்பலாகவும்
இருக்காதே.
- ஜான்சன்
இந்த உலகத்தில் நான் யாரோ ஒருவன்
என நினைக்காதே
யாரோ ஒருத்திக்கு
நீயே உலகமாக இருக்க முடியும்.
-பில் வில்சன்
தனிமையாயிருக்க சக்தி இல்லாததாலேயே
சகல துன்பங்களும் விளைகின்றன.
- லாடிரூயர்
தன்னந்தனியாக நிற்பவனை விட
அதிக சக்தி வாய்ந்தவன்
உலகில் கிடையாது.
- கிப்சன்
மற்றவர்களை சிறிதும் மதிக்காமல்
தம்மைப் பற்றி மட்டுமே
உயர்வாக நினைப்பவர்கள்
எப்போதும் தனியாகவே இருப்பார்கள்.
- கிளாரிமன்
தனிமையாக நிற்பவனே
உலகில் தலைசிறந்த வலிமையுள்ள மனிதன்.
- இப்சன்
தீயவனை நண்பனாக்கிக் கொள்வதைவிட
தனிமையை நண்பனாக்கிக் கொள்வது மேல்.
-முகமது நபி
மற்றவர்கள் உங்களுக்கு இடைஞ்சலாகத் தோன்றினால்
உங்கள் வாழ்வுக்கே குறிக்கோள் இல்லாமல் போய்விடும். மற்றவர்களிடமிருந்து பிரிந்து தனிமையில்
இருப்பது தற்கொலைக்கு ஒப்பாகும்.
-லியோ டால்ஸ்டாய்
பாலங்கள் கட்டுவதற்குப் பதில்
சுவர்கள் எழுப்புவதால்
வாழ்க்கையில் பலர்
தனிமையால் அவதிப் படுகின்றனர்.
-ஜே எப் நியூட்டன்
தனிமை கொஞ்சம் வித்தியாசமானது.
நாமே எடுத்துக்கொண்டால் இனிக்கும்.
மற்றவர் கொடுத்தால் அது கசக்கும்.