பல அரசுகளின் நிழல்களை தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.
- திருவள்ளுவர்
நீ மேன்மையடைய விரும்பினால்
உன் தாய் தந்தையர் சொல் கேட்டு நடப்பதுடன்
அவர்களையும் காப்பாற்றவேண்டும்.
- திருவள்ளுவர்
ஒருவரின் உணர்ச்சி
மனதைப் பொறுத்து அமையும்;
அவர் இப்படிப்பட்டவர் என்று
அளந்து சொல்வது
அவர் சேர்ந்திடும்
கூட்டத்தைப் பொறுத்து அமையும் .
- திருவள்ளுவர்
வலிமையான சக்கரங்களைக் கொண்ட
பெரிய தேர் கடலில் ஓட இயலாது;
கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓட இயலாது;
அவரவர் தமக்குரிய இடங்களிலேயே
சிறப்பாகச் செயல்பட முடியும்.
- திருவள்ளுவர்
நேராக இருந்தாலும்
அம்பு கொடியதாக இருக்கிறது;
வளைவுடன் இருப்பினும்
யாழின் கொம்பு இனிமையைத் தருகிறது;
அதுபோல
மக்களின் பண்புகளை
அவரவர் தோற்றத்தால் அல்லாமல்
செயல்வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.
- திருக்குறள்
வில் வளைவது
தீமை செய்யவே
அதைப் போலவே
பகைவர்
வணங்கிப் பேசும்
சொற்களும்.
- திருவள்ளுவர்
பிற தொழில் செய்வோரையும்
உணவளித்து தாங்குவதால்
உழவர்களே இந்த உலகத்தவர்க்கு
அச்சாணி ஆவர்.
- திருவள்ளுவர்
எல்லாப் பற்றையும்
விட்டு விட்டதாகக் கூறும்
துறவிகள் கூட
உழவரின் கையை எதிர்பார்த்து தான்
வாழவேண்டும்.
- திருவள்ளுவர்
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்
பெய்து கெட்டவரைத் திருத்துவதும்
எல்லாமே மழை தான்.
- திருவள்ளுவர்
இது எளிதான செயல்தான் என எண்ணி
பிறர் மனைவியிடம் நெறி தவறி செல்கிறவன்
எப்போதும் அழியாது நிற்கும் பழியை அடைவான்.
-திருவள்ளுவர்
தான் பெற்ற உணவை
பலரோடும் பகிர்ந்து உண்ணும்
பழக்கம் உடையவனை
பசி என்று கூறப்படும் தீயநோய்
அணுகுவது இல்லை
-திருவள்ளுவர்
உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும். -திருவள்ளுவர்
பிறருக்குக் கொடுத்து உதவுவதும்
தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு
மென்மேலும் பெருகி
பல கோடிப் பொருள் உண்டானாலும்
பயனில்லை.
-திருவள்ளுவர்
குறளைக் கற்றுக்கொள்வதால் நீங்கள் செம்மைப்பட்டு,
நீங்கள் செம்மைப்படுவதால் நாடு செம்மைப்பட்டு,
நாடு செம்மைப்படுவதால் உலகு செம்மைப்படச் செய்யவேண்டும்.
-அறிஞர் அண்ணா
பிறரால் பழிக்கப்படாத நல்ல குணங்கள்
அமைந்த புதல்வரைப் பெற்றால்
ஒருவருக்கு ஏழு பிறவிகளிலும்
தீவினைப் பயனாகிய துன்பங்கள் அணுகாது.
- திருவள்ளுவர்
நீ மேன்மையடைய விரும்பினால்
உன் தாய் தந்தையர்கள் சொல்கேட்டு நடப்பதுடன்
அவர்களையும் காப்பாற்றவேண்டும்.
-திருவள்ளுவர்
நீர்ப்பூக்களின் உயரம்
அது இருக்கும் நீரின் உயரத்தைப் பொறுத்து அமையும்.
அதைப் போன்றே
மனிதரின் உயர்வும்
அவர்களின் உள்ளத்தைப் பொறுத்தே அமையும்.
- திருவள்ளுவர்
பிறரை அழச் செய்து பெற்ற செல்வம்
அதைப் பெற்றவன் அழும்படி
விட்டு நீங்கும்;
நல்வழியில் சேர்த்த செல்வம்
நீங்கினாலும்
பின் வந்து சேரும்.