/* GOOGLE ADS CODE STARTS --*/ /* GOOGLE ADS CODE ENDS --*/ பொன்மொழிகள் Quotes in Tamil: துணிவு Thunivu
தயங்குபவனுக்கு
அதிகாரம், செல்வம், வெற்றி
போன்றவைகள் கிட்டாது.

- எமேர்சன்


துணிவு!
இதில்தான் உங்களின்
மேதைத்தனம், ஆற்றல், அற்புதம் என
அனைத்தும் புதைந்து கிடக்கின்றன.

- கதே


துணிவுமிக்க மனிதனே
தன் தொழிலில்
ஒவ்வொரு முறையும் புதுமை படைத்து
வெற்றி பெறுகின்றான்.

- டேல் டவுட்டன்


உலகை வெல்ல
கப்பல் நிறைய ஆயுதம் வேண்டாம்;
ஒரு கை நிறைய
வலிமை இருந்தாலே போதும்.

- ஜெர்மானிய பழமொழி



ஒன்று தவிர்க்க முடியாது எனும் போது,
அதை எதிர்கொள்ளும் தைரியம்
வந்துதானே தீர வேண்டும்.



தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி
எந்தச் செயலையும் செய்யாமல்
பின்வாங்குவது இழிவானது.

- ஹென்றி போர்ட்


தயங்குபவன்
கை தட்டுகிறான்;
துணிந்தவன்
கை தட்டல் பெறுகிறான்.

- ஜான் கென்னெடி


துணிவோடு செயல்படாத  காரணத்தால்
உலகில் பல திறமைகள்
சிதறிப் போய்விடுகின்றன.

- சிட்னி ஸ்மித்



உங்களின் தோல்வி
எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்னைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு
நீங்கள் பயந்து விலகும்போது.

- பாரதியார்


நெஞ்சிலே வலுவிருப்பின்
வெற்றி தஞ்சமென்று உரைத்து வந்து
நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி.

- அறிஞர் அண்ணா


வாழ்க்கை அற்புதமானதாக
இருக்க முடியும்;
நீங்கள் அதைப்பற்றி
பயப்படவில்லை என்றால்.

- சார்லி சாப்ளின்




உயர்ந்த உள்ளங்களுக்கு
உறுதியான எண்ணங்கள் சொந்தம்;;
பலவீனமான உள்ளங்களுக்கு
பகற்கனவுகள் சொந்தம்.

- பைரன்


தடை எவ்வளவுக்கவ்வளவு
பெரிதாயிருக்கிறதோ
அவ்வளவுக்கவ்வளவு அதை
வெல்வதிலும் பெருமையுண்டு.

-மோலியார்


எனது துணிவுடைய இளைஞர்களே
நீங்கள் அனைவரும் பெரும் பணிகளைச்
செய்யப் பிறந்தவர்கள்எ ன்பதில்
நம்பிக்கை கொள்ளுங்கள்.
வானத்தில் முழங்கும் இடிக்கும் அஞ்சவேண்டாம்.
நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள்.

-விவேகானந்தர்


தாழ்வு மனப்பான்மையும் பயமும்
முன்னேற்றத்தை தடை செய்கின்றன.
மனத்திற்கு தைரியத்தை அதிகம் கொடுத்து
முன்னேறிச் செல்வதில் அக்கறையாயிருங்கள்.
வெற்றி நிச்சயம்.

-மால்ட்ஜ்


மனிதனுடைய மனதை 
இயக்கி வைப்பவை
நன்மையில் ஆசையும்
தீயதில் அச்சமும்.


- ஜான்சன்


ஒருவனிடம் இருக்கவேண்டிய முதன்மையான குணம்
துணிவாக இருப்பதே ஆகும்.
ஏனென்றால், அந்த துணிச்சல் தான்
மற்ற எல்லாக் குணங்களுக்கும் அடிப்படையானதாகும்.
மற்ற எல்லாக் குணங்களும் அவனிடம் வந்தடையும்
என்ற உத்தரவாதம் அளிக்கக் கூடியதாகும்.

-வின்சென்ட் சர்ச்சில்


அதிர்ஷ்டம் வந்தாலும் வராவிட்டாலும்
துரதிர்ஷ்டத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய
துணிச்சலினால் எதையும் சாதித்து விடலாம்.

- ஜி.டி.நாயுடு


உங்களால் எது முடியுமோ அல்லது முடியும் என்று
எதைக் கனவு காண்கிறீர்களோ
அதை உடனே செய்யத் துவங்குக.
துணிச்சலில் மேதைமை இருக்கிறது.
பலம் இருக்கிறது.
மந்திர சக்தி இருக்கிறது.
இப்போதே தொடங்குக.

- கதே


உண்மையில் கஷ்டங்கள் நம்மை
ஒன்றும் செய்வதில்லை.
அதைப் பற்றிய பயம் தான்
மனத்தைக் கலக்கி
அறிவைக் குழப்பி
நம்மை நிலைகுலையச் செய்துவிடுகிறது.

-மெர்வின்