/* GOOGLE ADS CODE STARTS --*/ /* GOOGLE ADS CODE ENDS --*/ பொன்மொழிகள் Quotes in Tamil: பொறுமை porumai
அன்புடன் கேட்க வேண்டும்;
புத்திசாலித்தனமாக பதில் சொல்லவேண்டும்;
நிதானமாக யோசிக்கவேண்டும்;
பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்க வேண்டும்.

- சாக்ரடீஸ்



வலிமையையும் உணர்ச்சியும் சாதிப்பதை விட
பொறுமையம் காலமும் அதிகமாக சாதித்து விடும்.

- லாபென்டெயின்


நீ வாயைத் திறக்கும் போதெல்லாம்
உன் உள்ளத்தை திறக்கிறாய்
ஆகவே,
கவனமாக இரு.

- யஸ்


ஒவ்வொரு துரதிஷ்டத்தையும்
பொறுமையால் தான்
வெல்ல வேண்டும்.

- வர்ஜில்


பிறர் நாவை அடக்க முடியாது;
ஆனால் பிறர் மொழிகளை
நாம் அலட்சியம் செய்ய முடியும்.

- கேட்டோ


பருவம் தவறிய மழையும்
நிதானம் தவறிய மனிதனும்
பயனற்றுப் போவது உறுதி.

- பகவத்கீதை


காத்திருக்க தெரியாதவன் முட்டாள்;
காத்திருக்க விரும்பாதவன் பேதை;
காத்திருக்க முடியாதவன் தற்கொலையாளி.

- பகவத்கீதை


கோபப்பட்டு
வென்று விட்டாய் என்றால்,
உன் கோபம் பெரிது என்று
அர்த்தமல்ல;
அதைத் தாங்கிக்கொண்டவர்களின் பொறுமை
பெரிது என்று அர்த்தம்.




முந்திக்கொண்ட முதல் செங்கல்
கோவிலின் அடித்தளத்தில் நின்றுவிடும்;
காத்திருந்த கடைசி செங்கல் தான்
கலசம் தொடும்.
சாதிக்க மிக மிக அவசியம்
பொறுமை.


எல்லா நிலைமைகளிலும் நிதானமாய் இரு!
எல்லா விஷயங்களையும் நீ மாற்ற முடியாது!
எல்லா விஷயங்களும் நீ நினைப்பதுபோல் இல்லை !
எல்லா விஷயங்களுக்கும் காரணம் உண்டு !
எல்லா விஷயங்களும் உனக்காக நடப்பதில்லை !
அதனால் நீ அமைதியாக இருப்பதே நல்லது.





அடக்கமும் அன்பும்
துன்பத்தால்
கற்றுக்கொள்ளப்படும்.

   - ஜார்ஜ் எலியட்


பழி வாங்குதல் வீரமன்று
பொறுப்பதே வீரம்.

- ஷேக்ஸ்பியர்


தத்துவங்கள் எல்லாம் 
இரண்டே சொற்களில் அடங்கிவிடும்.
ஒன்று பொறுத்துக்கொள்ளல், 
மற்றொன்று விட்டு விலகல்.

- எபிடேக்ஸ்



அறிவு என்பது ஆற்றைப் போன்றது;
அது எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாக இருக்கிறதோ
அவ்வளவுக்கவ்வளவு சந்தடியின்றி அமைதியாயிருக்கும்.

-பேகன்


சக்தி அதிகமாக இருப்பினும்
ஓட்டம் நிதானமாகவே  இருப்பது நல்லது.

- பர்மா பழமொழி


எதிராளியின் தோல்வியைக் கண்டு
அதை வெற்றிகரமாகக் கொண்டாடாமல்
பொறுமையாக இருக்க முடியுமானால்
அதுவே இதயத்துக்கு மகத்தான சோதனை.

- எமெர்சன்


பொறுமையுடன் இருக்கக் கற்றுக் கொள்வதே
வெற்றியின் ரகசியமாகும்.

-டி. மேஸ்ட்ரி 



மகிழ்ச்சியின் திறவுகோல் பொறுமை.

-துருக்கி பழமொழி



ஒவ்வொரு துரதிஷ்டத்தையும்
பொறுமையால் தான் வெல்ல வேண்டும்.

- வர்ஜில்


அடக்கம் என்பது தன்னைத்தானே 
சரியாக மதிப்பிட்டுக் கொள்வதாகும்.

- ஸபர்ஜியன்