/* GOOGLE ADS CODE STARTS --*/ /* GOOGLE ADS CODE ENDS --*/
பொன்மொழிகள் Quotes in Tamil: மனைவி Manaivi
Pages
முகப்பு
தலைப்புகள்
அறிஞர்கள்
முகநூல் பக்கம்
கணவனைத் தெரிந்துகொள்ள
மனைவியின் முகத்தைப்
பாருங்கள்.
- ஸ்பெயின் பழமொழி
காதலியின் தாவணியைவிட
மனைவியின் சேலைக்கு
மகத்துவம் அதிகம்.
முன்னது செலவழிக்கும்;
பின்னது சேமிக்கும்.
- கோல்டன்
வெற்றிகரமான மனிதன் என்பவன்
மனைவி செலவழிப்பதற்கு மேல்
சம்பாதிப்பவன்;
வெற்றிகரமான பெண் என்பவள்
அத்தகைய மனிதனை அடைபவள்.
- கூலிட்ஜ்
கணவனுக்கு மனைவி
இளம் வயதில் எஜமானி;
நடு வயதில் கூட்டாளி;
தள்ளாத வயதில் தாய்.
உங்களது அன்பை
மனைவியிடம் காட்டுங்கள்;
உங்களது ரகசியங்களை
தாயிடம் கூறுங்கள்.
-அயர்லாந்து பழமொழி
உண்மையான மனைவி
கணவனுடைய
இல்லத்தில் அடிமை;
இதயத்தில் அரசி.
-ரஸ்கின்
மனைவிக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் சண்டை வருகிறது;
பிடித்திருந்தால் சந்தேகம் வருகிறது.
- மார்க் ட்வைன்
ஒருவனின் துன்பத்தை மறக்கடிப்பது
மனைவியும் அவள் அன்பும்
குழந்தையும் அதன் வசீகரப் புன்னகையும் தான்.
-கால்ட்டன்
ஒரு நேர்த்தியான மனைவி
எப்போது வெளியே சென்றிருந்தாலும்
உடனே வீட்டுக்குத் திரும்ப
ஆவலுள்ளவாய் இருப்பாள்.
எங்கே தன் கணவன்
தனிமையைச் சந்தோஷமாக
அனுபவித்துக் கொண்டு இருப்பானோ
என்ற பயத்தால்.
-வால் ஸ்ட்ரீட் நூலிலிருந்து
ஒரு குற்றமுள்ள மனைவி வேண்டாமெனில்,
இரு குற்றமுள்ள மனைவி வந்து சேர்வாள்.
- வேல்ஸ்
இந்த பூமியில் மட்டமான பெண் ஒரே ஒருத்திதான் உண்டு.
அந்த மட்டமான பெண் தன் மனைவிதான் என்று
ஒவ்வொரு புருஷனும் நினைப்பதுதான் பரிதாபம்.
-லௌசிங்
போர் நடவடிக்கையிலும் சரி,
மனைவியை தேர்ந்தெடுப்பதிலும் சரி,
ஒரு முறை தவறு செய்துவிட்டால்
அதன் பாதிப்பு இறுதி வரை தொடரும்.
-பிடில்டன்
கொஞ்சம் இரக்கம், கொஞ்சம் புகழ்ச்சி, கொஞ்சம் பாராட்டு,
இவை போதும் மனைவியை மகிழ்விக்க .
-ஒலிவர் கோல்ட்ஸ்மித்
நல்ல குதிரை இடறாது,
நல்ல மனைவி முணுமுணுக்க மாட்டாள்.
-இங்கிலாந்து பழமொழி
கன்னிப் பெண்கள் எல்லாரும் நல்லவர்கள் தான்.
அப்படியானால் மோசமான மனைவிகள் எங்கிருந்து உருவாகின்றனர்.
-தாமஸ் புல்லர்
இந்த காலத்துப் பெண்கள் எல்லாவற்றையும் சுலபமாகப் புரிந்து கொள்கிறார்கள், தங்கள் கணவனைத் தவிர.
-ஆஸ்கார் ஒயில்டு
மனை பாழாவது
மனைவி இல்லாமையால்.
-நான்மணிக்கடிகை
கோழைக்கு மனைவியாக இருப்பதை விட
வீரனுக்கு விதவையாக இருப்பது மேல்.
வேண்டா பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்.
தாரமும் குருவும் தலைவிதிப்படி.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)