/* GOOGLE ADS CODE STARTS --*/ /* GOOGLE ADS CODE ENDS --*/ பொன்மொழிகள் Quotes in Tamil: முயற்சி Muyarchi
விதைத்தவன் உறங்கலாம்;
ஆனால் விதைகள்
ஒருபோதும் உறங்குவதில்லை.

- பிடல் காஸ்ட்ரோ


நாய் குரைக்கின்ற போதெல்லாம்
நீங்கள் தாமதித்தீர்களானால்
நீங்கள் செல்ல வேண்டிய
இடத்திற்கு செல்லவே முடியாது

- அரேபிய பழமொழி


கேட்க நினைத்தால்
மீன் வேண்டுமென்று கேட்காதே;
தூண்டில் வேண்டுமென்று கேள்.

- ஜப்பான் பழமொழி


மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும்போது
வெற்றிக்கான சரியான பாதையை
கண்டுபிடித்து விடுவீர்கள்.

- டாக்டர் ஹில்



கஷ்டம் இருக்கிறது ஒன்றும் முடியவில்லை
என்பன போன்ற எதிர்மறையான வார்த்தைகளை
ஒரு போதும் பேசாதீர்கள்;
இன்னும் சிறப்பாக வாழ்வேன்
அதற்கான சூழிநிலைகளையும்
நேர்மையான பாதைகளையும்
நானே முயற்சி செய்து ஏற்படுத்துவேன்
என்று கூறுங்கள்.
வரம்பில்லா ஆற்றல் பெற்று
மிகப் பெரிய செல்வந்தராக
வாழ்வில் உயர்வீர்கள்.

- சார்லஸ் பில்மொர்





மனப்பூர்வமான முயற்சிகள்
மகத்தான வெற்றிகளைத்
தராமல் விட்டதாக
சரித்திரமே கிடையாது.

- ஜான்வானா மேக்கர்



நீ உன் வலது காலை
முன்னே எடுத்து வை;
உன் இடது கால்
தானாகவே முன்னால்
வந்துவிடும்.

- நெப்போலியன் ஹில் 




முன்னேற வேண்டுமானால்
உங்கள் கால்களால் நடந்து போங்கள்.
பிறர் முதுகின் மேல்
சவாரி செய்யாதீர்கள்.

- காஸ்ட்ரோ


காரியத்தில் முக்கியத்துவத்தை விட
காரியம் செய்யும் காலத்தின் முக்கியத்துவமே
பிரதானம்.

- கண்ணதாசன்




உலக சரித்திரத்தில்
காணப்பெறும் காரியங்களெல்லாம்
உற்சாகத்தின் வெற்றிச் சின்னங்களே

- எமெர்சன்



வெற்றிகளை மட்டும்
வரலாறுகள் பேசுவதில்லை;
தோல்விக்கும் அங்கே இடம் உண்டு.
முயற்சி செய்வோம்.
இரண்டில் ஒன்று நிச்சயம் கிடைக்கும்.

இந்த உலகில் உங்களுக்கென்று எதுவுமே இல்லை
என்று சொல்லாதீர்கள்;
இதோ
இன்றைய தினம் இருக்கின்றதே.
இன்று ஏதாவதொரு வழியில் முயற்சி செய்தீர்களா?
முதலில் முயற்சி எனும் விலையை
நிகழ் காலத்தில் கொடுங்கள் .
பயன் தானாக வந்து சேரும்.

- தாமஸ் தாப்பர்

விழிகளைத் திற
ஒளி கிடைக்கும்;
எழுந்து நட
வழி பிறக்கும்;
தேடிப் பார்
வேண்டியது கிடைக்கும்.




ஒவ்வொரு பறவை இனத்திற்கும்
இறைவன் உணவை அளிக்கின்றார் ;
ஆனால் அந்த உணவை அவர்
அப்பறவையின் கூட்டிற்குள்
கொண்டுபோய் வைப்பதில்லை.

- ஹாலண்ட்



நல்ல குறிக்கோளை அடைவதற்காக
தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே
பிற்காலத்தில் அனைவரும் படிக்கும்
வரலாறாக மாறுகிறது.

- கார்ல் மார்க்ஸ்



ஆயிரம் காடுகளை உண்டாக்கும் ஆற்றல்
ஒரு விதையில் அடங்கியிருக்கிறது.

- எமர்சன்


துடைக்க முடியாதவற்றை
தூசியாவது தட்டவேண்டும்.

- ஜெர்மானிய பழமொழி


முயற்சி என்பது விதை போல 
அதை விதைத்துக்கொண்டே இரு;
முளைத்தால் மரம்
இல்லையென்றால் அது 
மண்ணிற்கு உரம்.






கடினமான பாறையை
மென்மையான நீர் துளை செய்கிறது.
அச்செயலே விட முயற்சி.

- ஓவிட்



துவண்டு விடாதீர்கள்;
முதல் தடவை உங்களை ஒதுக்கலாம்,
இரண்டாம் தடவை
நீங்கள் ஒளி வீசப் போவது உறுதி.
எனவே தொடர்ந்து செல்லுங்கள்.

- வால்டேர்