/* GOOGLE ADS CODE STARTS --*/ /* GOOGLE ADS CODE ENDS --*/ பொன்மொழிகள் Quotes in Tamil: விமர்சனம் vimarsanam
ஒருவரைப் பற்றி ஒருவர் பேசுவதற்கு பதிலாக 
ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டால் 
உலகில் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.





மற்றவர்களை கெட்டவர்கள் என்று
சொல்வதன் மூலம் நாம்
நல்லவர்களாகிவிட மாட்டோம்

- மகாத்மா காந்தி

வெறுப்பைக் கூட சகித்துக் கொள்ளலாம்.
ஆனால் எள்ளி நகையாடுவதை
ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது.

- சிட்னி ஸ்மித்


பிறரை விமர்சனம் செய்யும் ஒருவன்
தன் சொந்த குண நலன்களையும்
வெளிப்படுத்துகிறான்.

-  ஜீன் பால்



எப்போதும் பிறரை
எழுத்தாலோ பேச்சாலோ செயலாலோ
புண்படுத்தாதவன் எவனோ
அவனே பெரிய மனிதன்.
பெரிய மனிதனுக்கு இலக்கணம் வகுப்பவனும்
அவனே.

-ரஸ்கின்


மற்றொருவரின் குணத்தைச் சித்தரிக்கையில் தான் 
ஒருவன் தன் குணத்தையே 
மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறான்.

- ஜீன் பால் ரிஷ்டர்