சூடு கண்ட பூனை அடுப்பண்டை செல்லாது.

சுருங்க சொல்லி விளங்க வை.

சிறு துளி பெரு வெள்ளம்.

சிறு துரும்பும் பல்குத்த உதவும்.

குரைக்கிற  நாய்  கடிக்காது.

காற்றுள்ள  போதே தூற்றிக்கொள்.

-பழமொழி

காக்கைக்கும் தன்  குஞ்சு  பொன் குஞ்சு.

-பழமொழி

கழுதைக்கு தெரியுமா கற்பூர  வாசனை?

கத்திமுனையைவிட பேனா  முனையே  வலிமையானது.

கண்ணாடி மாளிகையில் இருந்து கல் எறியாதே.

உன் மனம் உலகத்திலேயே உழன்று கொண்டிருக்கும்போது, 
எல்லாம் ஈஸ்வரனே என்று வாயால் மாத்திரம் சொல்லிக்கொண்டிருந்தால் 
உனக்கு யாதொரு நன்மையும் ஏற்படாது. 

-பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் 

நல்லதை செய்யும் எந்த நேரமும் 
கெட்டதாக இருக்க வாய்ப்பில்லை.



வெற்றிக்கும் தோல்விக்கும் 
சிறு வித்தியாசம் தான். 
கடமையை செய்தால் வெற்றி. 
கடமைக்கு செய்தால் தோல்வி.


விரிக்காதவரை சிறகுகள் கூட பாரம்தான், 
விரித்து பறந்தால் வானம் கூட தொடும் தூரம்தான்.

தன் மீது விழும் ஒவ்வொரு அடியும் தன்னை சிற்பம் ஆக்குகிறதென்பது கல்லுக்குத் தெரியாது.

வாழ்க்கை தரும் கஷ்டங்கள் 
வலிமையானவைதான், 
ஆனால் மனிதனின் நம்பிக்கை 
அதைவிட வலிமையானது.



ஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட, 
விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவனே ஜெயிப்பான்.

ஆரோக்கியமில்லாத வாழ்க்கை வாழ்வன்று , 
அது அயர்வும் துன்பமும் நிறைந்ததாகும். 
அது மரணத்தின் நிழல்.     

- ராபலே  



உண்பதன் இன்பம் 
மதிப்புயர்ந்த பொருட்களைத் தாளிப்பதிலோ, 
நறுமணத்திலோ இல்லை. 
உன் உழைப்பே 
ருசி அளிக்கிறது.       

- ஹோரஸ்


நாக்கில் சுவையைத் திருப்திப்படுத்துவதற்காக 
நமக்கு ஒரு தீமையும் செய்யாத உயிர்களைக் கொல்வது 
மனிதத் தன்மைக்கு அழகல்ல.   

- காண்டேகர் 


மனமே, பதற்றப்படாதே! 
மெல்ல மெல்லத்தான் எல்லாம் நடக்கும். 
தோட்டக்காரன் நூறு குடம் நீர் ஊற்றினாலும் 
பருவம் வந்தால்தான் பழம் பழுக்கும். 

- கபீர் தாசர்



கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதே.

கடனைக் கொடுத்து 
சண்டையை விலைக்கு வாங்காதே.


கடுகு போன இடம் ஆராய்வர், பூசணி போன இடம் தெரியாது.

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.

கடவுளுக்கு அடுத்தபடி பெற்றோர்.

கடந்த காலம் திரும்ப வராது.

ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

-பழமொழி

ஒற்றுமையே பலம் .

-பழமொழி

ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு  பதம்.



ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.


ஒய்யாரக்  கொண்டையிலே தாழம்பூவாம், உள்ளே இருப்பது ஈரும் பேனாம் .

இளமையில் கல்லாதது முதுமையில் வராது.


ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?



ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு.

- பழமொழி 


ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை.


ஏட்டு சுரைக்காய்
கறிக்கு  உதவாது. 


எறும்பு ஊற கல்லும் தேயும்.

-பழமொழி


எலி வளையானாலும் தனி வளை வேணும்.


எல்லாம் நன்மைக்கே.

எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே.

எரிகிற வீட்டில் பிடிங்கின  மட்டும் இலாபம். 

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாதே.


ஊரோடு கூடி வாழ்.


உழைப்பின்றி ஊதியமில்லை.

உருவத்தை பார்த்து எடை போடாதே.

-பழமொழி

உப்புத் தின்றவன்
தண்ணீர் குடிப்பான்.


உப்பிட்டவரை உள்ளளவும் நினை.


உண்மையான நண்பனை ஆபத்தில் அறி.

உண்மை ஒரு மைல் செல்வதற்குள் வதந்தி உலகை சுற்றிவிடும்.

ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை.

இனம் இனத்தோடு சேரும்.

இக்கரைக்கு அக்கரை பச்சை.

யானை  வரும்  பின்னே, மணியோசை வரும் முன்னே. 

ஆனைக்கும் அடி சறுக்கும்.

ஆற்றில் ஒரு கால்,  சேற்றில் ஒரு கால்.

ஆற்றில் போட்டாலும் அளந்து   போடு.

ஆழம் தெரியாமல் காலை விடாதே.

ஆத்திரக்காரனுக்கு  புத்தி  மட்டு.




ஆபத்துக்கு   பாவமில்லை.

ஆபத்துக்கு  உதவுபவனே  உண்மையான  நண்பன்.

ஆணுக்கு  ஒரு  நீதி , பெண்ணுக்கு  ஒரு  நீதியா?

ஆடத்தெரியாதவன்  அரங்கம்  கோணல்  என்றானாம்.

ஆசை  வெட்கம்  அறியாது.

ஆசைக்கு  அளவில்லை.

அன்பே  கடவுள்.

-பழமொழி

அனுபவமே  அருமையான  ஆசான்.


அளவுக்கு  மிஞ்சினால்  
அமிர்தமும்  நஞ்சாகும்.


அரைகுறை  அறிவு  ஆபத்தில்  முடியும்.

அரசன்  அன்று  கொல்வான்  தெய்வம் நின்று கொல்லும் .

ஏழைச்சொல் அம்பலம் ஏறாது.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.

அரசனை நம்பி புருஷனை கை விடலாமா.

அறிவே ஆற்றல்.

அத்தி பூத்தாற்போல்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும்.

-பழமொழி

அடியாத மாடு படியாது.

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.

அடி உதவுவது  போல் அண்ணன்  தம்பி  உதவ  மாட்டான்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் .

-தமிழ் பழமொழி 


கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், 
தன்னம்பிக்கையை இழக்காமலும் 
 செவிசாய்க்கும் திறன்            

- ராபர்ட் பிராஸ்ட்


காலத்தில் செய்வதைத் தள்ளிப்போட வேண்டாம்.  
தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும்.

- ஷேக்ஸ்பியர்


நீ பேசும் வார்த்தைகளின் மீது 
உனக்குள் கட்டுப்பாடு இருக்க வேண்டும்     

- அரவிந்தர்



ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது.  

 - ஷாம்பர்ட்

நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது.
 

- ஜான்ஸன்

இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும்.

- அரவிந்தர்

அன்புள்ள இடத்தில்தான் 
ஆண்டவன் இருக்கிறான்
 
- காந்தியடிகள்


வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் 
முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று; 
வெற்றி பெற்றாய் என்றால் 
உன் செயல்பாடு சென்ற முறையை விட 
இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.

- பான்னி ப்ளேயர்




நீ 
பிறரின் குணாதிசயங்களைக் 
கணிக்கத் துவங்கினால் 
அவர் பால் 
அன்பு செலுத்த 
நேரம் இருக்காது.

- அன்னை தெரசா





இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் 
ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் 
கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் 
எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

- அன்னை தெரசா



வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள்:
1.. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

- வில்லியம் ஷேக்ஸ்பியர்