/* ponmozhigal like button css*/ /* ponmozhigal like button */
பிறர் வாழ்க்கையை 
அளவுகோலாக வைத்தால், 
நம் வாழ்க்கையின் மதிப்பை 
ஒருபோதும் அறிய முடியாது. 



உன் எல்லைகளை 
உலகம் தீர்மானிக்க அனுமதிக்காதே.




நமக்கு மேலே இருப்பவரைப் பார்த்தால்,
நாம் ஏழை...
நமக்குக் கீழே இருப்பவரைப் பார்த்தால்,
நாம் பணக்காரர்...
ஆனால்
ஏழை என்பதையும்,
பணக்காரர் என்பதையும்
துல்லியமாக அளவிடும்
ஒரே அளவுகோல் –
மகிழ்ச்சி.
எவன் ஒருவன்
மகிழ்ச்சியாக வாழ்கிறானோ,
அவனே உண்மையான பணக்காரன்...
எவன் ஒருவன்
மகிழ்ச்சிக்காகத் தவிக்கிறானோ,
அவனே உண்மையான ஏழை...



நீங்கள் வாழ்வில் வெற்றி பெற விரும்பினால், 
ஒரு விதியை மட்டும் கடைப்பிடியுங்கள்.
உங்களுக்கு நீங்களே பொய் சொல்லிக்கொள்ளாதீர்கள்.

— பாவ்லோ கொய்லோ





ஏதோவொரு சாதாரண நாளில்
சட்டென முடிந்து போகப் போகும்
வாழ்க்கைக்குத் தான் அத்தனை
ஓட்டமும், போராட்டமும்.

— ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி 



வாயைத் திறந்தாலே 
வாக்குவாதம் என்று ஆன பிறகு, 
வார்த்தைகளுக்கு அங்கு என்ன வேலை?
புரிதல் இல்லாத இடத்தில் பேசுவதை விட,
விலகிச் செல்வதுதான் நிம்மதி !


நாம் கேட்கும் அனைத்தும் ஒரு கருத்துதான், 
உண்மை அல்ல. 
நாம் காணும் அனைத்தும் ஒரு கோணம்தான், 
மெய்மை அல்ல.

— மார்கஸ் அரேலியஸ் 



அருகில் இருப்பவர்கள் நண்பர்கள் அல்ல;
நம் மனதைப் புரிந்துகொள்பவர்களே 
உண்மையான நண்பர்கள்.



வாழ்க்கை நமக்கு கொடுப்பதை விட, 
வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுப்பதே அதிகம்.



வாழ்க்கையில் மாற்றம் வர வேண்டுமெனில், 
முதலில் நம் சிந்தனையில் மாற்றம் வர வேண்டும்.



காலம் காயங்களை ஆற்றுவதில்லை; 
அந்தக் காயங்களுடன் வாழப் பழக்குகிறது.



இடியாப்பச் சிக்கலை
எப்படி அவிழ்ப்பது
என்று திகைக்காதே
தின்று விடு.

- கவிக்கோ அப்துல் ரகுமான்



ஊழலை அழிப்பதும்
படிக்கட்டுகளைச் சுத்தம் செய்வதும்
ஒரே வழிமுறையில் தான் இருக்க வேண்டும்.
மேல் மட்டத்திலிருந்து ஆரம்பித்து
இறங்குவரிசையில் வரவேண்டும்!

- லீ குவான் யூ



தனிப்பட்ட புத்தகச் சேகரிப்பு என்பது
அமைதியாகச் சேரும் செல்வம்.

- நெப்போலியன் போனபார்ட்


நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி.
அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள்.

கையில் பணமில்லையே...
உடலில் வலுவில்லையே...
உதவி செய்ய நண்பர்கள் இல்லையே...

என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே...

எதற்கும் பயப்படாதே... தயங்காதே...!
இலக்கை நோக்கி அடியெடுத்து வை.
தொடர்ந்து முன்னேறு.

சோதனைகள் வரும். பாதை தெளிவாகும்.
நோக்கம் அடைந்தே தீருவாய்.

அதை யாராலும் தடுக்க முடியாது.


 

தேவைக்கும் ஆசைக்கும் என்ன வித்தியாசம்?
சோத்துக்கும் சொத்துக்கும் உள்ள வித்தியாசம் தான்.

Desire Quote in Tamil


நிம்மதியாக வாழ ரெண்டே வழி தான்
ஒண்ணு நம்ம ராஜாவா இருக்கனும் 
இல்லன்னா யார் ராஜாவா இருந்தா 
நமக்கென்னன்னு வாழனும்.




தொல்லை என நினைத்து சில நல்ல மனிதர்களை
தொலைத்து விடாதீர்கள்.
பின் தொட முடியா தொலை தூரத்திற்கு
சென்று விடுவார்கள்.




நாம சரியா இருந்தா கோபப்பட வேண்டியதில்லை;
நாம தப்பா இருந்தா கோபப்பட தகுதி இல்லை.




அழுக்காற்றில் ஒரு தூயவன் இறங்கினால்
ஆறு தூய்மையாவதை விட 
இறங்கியவன் அழுக்காவது உறுதி.


ஒழுக்கம் Ozhukkam Discipline