/* ponmozhigal like button css*/ /* ponmozhigal like button */
கவனம் செலுத்த வேண்டியது 
உங்களை மேம்படுத்துவதில் 
உங்களை நிரூபிப்பதில் அல்ல.



பிறர் வாழ்க்கையை 
அளவுகோலாக வைத்தால், 
நம் வாழ்க்கையின் மதிப்பை 
ஒருபோதும் அறிய முடியாது. 



உன் எல்லைகளை 
உலகம் தீர்மானிக்க அனுமதிக்காதே.




நமக்கு மேலே இருப்பவரைப் பார்த்தால்,
நாம் ஏழை...
நமக்குக் கீழே இருப்பவரைப் பார்த்தால்,
நாம் பணக்காரர்...
ஆனால்
ஏழை என்பதையும்,
பணக்காரர் என்பதையும்
துல்லியமாக அளவிடும்
ஒரே அளவுகோல் –
மகிழ்ச்சி.
எவன் ஒருவன்
மகிழ்ச்சியாக வாழ்கிறானோ,
அவனே உண்மையான பணக்காரன்...
எவன் ஒருவன்
மகிழ்ச்சிக்காகத் தவிக்கிறானோ,
அவனே உண்மையான ஏழை...