வருவதும் போவதும் இன்பமும் துன்பமும்;
வந்தால் போகாதது புகழும் பழியும்;
போனால் வராதது மானமும் உயிரும்;
தானாக வருவது இளமையும் மூப்பும்;
நம்முடன் வருவது பாவமும் புண்ணியமும்.

- வாரியார்