நினைத்ததற்கு மாறாக
காரியங்கள் நடக்கும் போதும்
செல்லும் பாதை
கரடு முரடாக இருக்கும்போதும்
கையிருப்பு குறைந்து
கடன் தொல்லை நெருக்கும்போதும்
உனது பொறுப்புகள்
உன்னை அழுத்தும்போதும்
அவசியமானால் ஓய்வு எடுத்துக்கொள்;
ஆனால் எந்த நேரத்திலும்
ஒதுங்கிவிடாதே.

- வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்